SELANGOR

பிபிஆர் பிரச்சனை: மத்திய அரசாங்கம் கடற்கொள்ளையனை போல் செயல் பட வேண்டாம்

சுபாங், 23 ஏப்ரல்:

   மத்திய அரசாங்கம் வீடமைப்பு மற்றும் உள்ளாட்சி துறை அமைச்சின் வழி கடற்கொள்ளையனைப் போல் நடந்து கொள்வது தொழில்முறை லான வழக்கத்தை பின்பற்றாமல் ஒரு அரசாங்கத்தின் வழிமுறையை பின்பற்ற வேண்டும் என்று வீடமைப்பு, கட்டிட நிர்வாகம் மற்றும் நகர வாழ்வு ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ இஸ்கண்டர் அப்துல் சமத் கூறினார். வீீடமைப்பு மற்றும் உள்ளாட்சி துறை அமைச்சு தாமான் புத்ரா மக்கள் வீடமைப்பு திட்டத்தில் நிர்வாக அலுவலகத்தை அமைத்து பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி மன்றத்தை புறக்கணித்து இச்செயலில் ஈடுபட்டதின் மூலம் அம்பலம் ஆகிவிட்டது என்றார். மாநில அரசாங்கம் இதுவரை இந்த வீடமைப்பு திட்டத்தில் செலவீனங்களை கருத்தில் கொண்டு ரிம 60 மில்லியனை மத்திய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது என்று விவரித்தார்.

”  பேச்சு  வார்த்தை எதுவும்  நடைபெறவில்லை  ஏனெனில் அவர்கள் மாநில  அரசாங்கத்திடம் எந்த ஒரு சந்திப்பிலும் கலந்து கொள்ள விரும்பவில்லை ஆனால் மாநகராட்சியின்  அனுமதி இல்லாமல் கொள்ளையனை போல் அலுவலகத்தை திறந்து அத்துமீறி நுழைந்துள்ளனர்.இது மத்திய மாநில அரசாங்கங்கள் தொடர்பு கொள்ளும் முறையல்ல. ஒரு அமைச்சர் நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தை மதிக்கவேண்டும். நாம்  அமர்ந்து விவாதிக்கலாம்” என்றார்.

மேலும் கூறுகையில், ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ இஸ்கண்டர் அப்துல் சமத் இப்பிரச்சினையை பேசி தீர்க்க தயாராக இருந்து வந்ததாக கூறினார். கையகப்படுத்தும் முயற்சிகள் சட்டத்தின் கீழ் நடைபெற வேண்டும் எனவும் ஒப்படைப்பு ஒப்பந்தம் சம்பந்தப்பட்ட  எல்லோரும் ஒத்துக் கொள்ளும் முறையில் இருக்கவேண்டும்.

”  மாநில அரசாங்கம் கேட்கும் தொகை நியாயமானது. நாம் செலவு செய்த அனைத்துக்கும் சான்றுகள் உள்ளன. மத்திய அரசாங்கம் இந்த வீடமைப்பு திட்டத்தில் வாடகை வசூல் செய்ததாக கூறுகிறது. ஆனால் இது வரையில் மிகக் குறைந்த விலையில் வாடகை இருந்து வருகிறது. இதற்கு மேல், வாடகை செலுத்தும் பழக்கமும் தேசிய முன்னணி காலத்தில் இருந்து தீர்க்க இயலாத நோயாகவே இருக்கிறது,” என்று இஸ்கண்டர் கூறினார்.

ISKANDAR SAMAD

 

 

 

 

 

மாநில அரசாங்கம் அக்கறையின்றி இருந்தால் இந்த நேரம் பிபிஆர் வீடுகள் குடியிருக்கும் சூழ்நிலையில் இருந்திருக்காது மாறாக மத்திய அரசாங்கம் மறுசீரமைப்பு பணிகளுக்கு அதிகமாக செலவு செய்ய நேர்ந்திருக்கும் என்றார்.


Pengarang :