RENCANA PILIHANSELANGOR

சகிப்புத்தன்மையை கடைபிடிப்போம், நாட்டின் நல்லிணக்கத்தை நிலைநிறுத்தவோம்

ஷா ஆலம், மே 30:

நாட்டில் வாழும் பல்லின மக்கள் நடுநிலையான போக்கு, சகிப்புத்தன்மை மற்றும் நீதியை அடிப்படைஅடிப்படையாகக் கொண்டு நல்லிணக்கத்தை பேணிக் காக்க வேண்டும் சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி கூறினார். தீவிரவாதிகளின் இரக்கமற்ற தாக்குதல்கள் ஆங்காங்கே நடந்து வருவதினால் உலக நாடுகளில் வாழும் மக்களின் நல்லிணக்கத்தை பாதிக்கிறது என்று தெரிவித்தார்.

மேலும் கூறுகையில், சமுதாயம் உலகை எதிர் கொள்ளும் சவால்கள் விரோதம், வெறுப்பு, பரவி வரும் தீவிரவாத போதனைகள் மற்றும் மதம் என்ற பெயரில் தீவிரவாத சித்தாந்தம் போன்றவற்றை பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

”   தீவிரவாதிகளின் கொடூரமான  தாக்குதல் அதிகமான உயிர்ப்பலிகள் ஏற்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு நடுநிலையான போக்கு, சகிப்புத்தன்மை மற்றும் சமுதாய நீதி மிக முக்கியம். ஆனாலும், நான் பொது மக்களை அமைதியாக இருக்கும்மாறு மற்றும் பதற்றமான செயல்பாடுகள் வேண்டாம். இதைத் தவிர்த்து, அனைவரும் கலந்துரையாடல் மூலம் இனங்களிடையே நல்லிணக்கத்தையும், ஒற்றுமை மற்றும் புரிந்துணர்வையும் வளர்க்க முடியும்,” என்று கூறினார்.

இதனிடையே, முகமட் அஸ்மின், மேன்சிஸ்தரில், இங்கிலாந்து நடந்த வெடிகுண்டு தாக்குதல்; ஜாகர்த்தா, இந்தோனேசியா மற்றும் மராவி நகர், தென் பிலிப்பைன்ஸ் போன்ற தீவிரவாதிகள் தாக்குதலால் உயிர்ப்பலி ஏற்படுத்தி வருவதை கடுமையாக சாடினார். இது போன்ற கொடுமைகளுக்கு காரணம் எதுவும் இல்லை என்றும் தவறு செய்தவர்கள் யாராயினும் நீதியின் முன் கொண்டு வர தீவிரமாக செயல்படும் படி கேட்டுக் கொண்டார்.


Pengarang :