MEDIA STATEMENT

வெளிநாட்டு ஊடகங்கள் ஜனநாயகத்திற்கு எதிரானது என குற்றம் சுமத்தாதீர்

வெளிநாட்டு ஊடகங்கள் நாட்டின் ஜனநாயகத் தன்மைக்கு மாசு ஏற்படுத்துவதாகவும் அவை நாட்டின் ஜனநாயகத்தை குழித்தோண்டி புதைப்பதாகவும் அன்மையில் அம்னோவின் உச்சமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ மாஹ்ட்சீர் காலீட் கூறியிருப்பது பெரும் வேடிக்கையாகவும் கோமாளிதனமாகவும் இருப்பதாக சிம்பாங் பூலாய் சட்டமன்ற உறுப்பினர் தான் கார் ஹிங் வர்ணித்தார். நாட்டின் அமைச்சராகவும் பதவி வகிக்கும் அவர் இன்னமும் ஊடக சுதந்திரத்தை முழுமையாக புரிந்துக் கொள்ளாமல் இம்மாதிரி கருத்துரைத்திருப்பது அர்த்தமற்றது என்றும் கூறினார்.

மேலும்,நாட்டின் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் செல்வாக்கை சரிப்பதற்காக எதிர்கட்சிகள் வெளிநாட்டு ஊடகங்களின் தகவல்களை ஆராயாமல் அப்படியே ஏற்றுக் கொண்டு செயல்படுவதும் விவேகமற்றது என கூறியிருக்கும் அவர் வெளிநாட்டு ஊடகங்களின் குற்றச்சாட்டுகளை ஆதாரத்துடன் இதுவரை பிரதமரோ அவரை சார்ந்தவர்களோ நிருபிக்கவில்லை என்பதையும் உணர வேண்டும் என்றும் நினைவுறுத்தினார்.

இதற்கிடையில்,சரவாக் டிரிபுனர் ஊடகம் டத்தோஸ்ரீ அன்வாரை சிறையில் தள்ள நஜிப் துன் ரசாக் வெ.9.5மில்லியன் நிதியை ஷாஃபி அப்துல்லாவிற்கு வழங்கியதாக தெரிவித்திருந்த நிலையில் அஃது உண்மையில்லை என்றும் சம்மதப்பட்ட ஊடகம் மன்னிப்பு கேட்டிருப்பதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் நாட்டு மக்கள் மத்தியில்  அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகவும் கூறியிருந்தார் என்றும் நினைவுக்கூர்ந்த அவர் மாஹாட்சீர் காலிட் இன்னமும் நடப்பியல் ஊடகத்துறையின் செயல்பாடுகளை முழுமையாக அறிந்திருக்க வில்லை என்றுதான் சொல்ல வேண்டும் என்றார்.

வெளிநாட்டு ஊடகங்களை வசைப்பாடும் மாஹாட்சீர் காலிட் இதற்கு முன்னர் நஜிப் குறித்த 1எம்டிபி மற்றும் வெ.2.6 பில்லியன் விவகாரங்கள் குறித்து இதுவரை ஏன் சட்டரீதியான எவ்வித நடவடிக்கையினை நஜிப்பும் அவரை சார்ந்தவர்களும் மேற்கொள்ளவில்லை என்பதை விளக்குவாரா என்றும் கேள்வி எழுப்பினார்.வெளிநாட்டு ஊடகங்கள் நாட்டிற்கு ஆபத்து என்பது அர்த்தமற்ற குற்றச்சாட்டு எனவும் குறிப்பிட்டார்.

 

இதற்கிடையில் கடந்த 2015ஆம் ஆண்டு வாஃல் ஸ்ட்ரேட் ஜெர்னல் மீது வழக்கு தொடக்கப்படும் என நஜிப் அறிவித்தும் இதுவரை அதனை செய்யாதது ஏன்?இன்னமும் எத்தனை காலம்தாம் காத்திருப்பது எனவும் விவரித்தார்.சம்மதப்பட்ட ஊடககத்திற்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்படும் என சொல்லப்பட்டிருந்தாலும் இதுவரை எவ்வித வழக்கஞ்றிஞர் நோட்டிஸ்சும் அனுப்பப்படவில்லை என்பதுதான் உண்மை என்றார்.

இதனை கருத்தில் கொள்ளும் போது 1எம்டிபி மற்றும் வெ.2.6 பில்லியன் விவகாரம் உண்மைதான் எனும் நம்பகத்தன்மையை கொண்டிருப்பதாகவும் கூறிய அவர் இன்னும் எத்தனையோ வெளிநாட்டு ஊடகங்கள் அம்னோவிற்கு பயம் கொள்ளாமல் துணிச்சலான செய்திகளை வெளியிட்டுக் கொண்டுதான் இருக்கிறது என்றார்.

வெளிநாட்டு ஊடகங்களை எதிர்கட்சியினர் அதீதமாய் நம்புவதாக குற்றம் சாட்டுவதை காட்டிலும்  அம்னோ தரப்பில் நிகழும் ஊழல்,லஞ்சம் உட்பட பல்வேறு சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க அவர்கள் முன் வர வேண்டும் என அறிவுறுத்தினார்.

 

வெளிநாட்டு ஊடகங்களில் பெரும்பான்மை செய்தி ஊடகங்கள் அவர்கள் வெளியிடும் ஒவ்வொன்றுக்கும் நம்பத்தகுந்த ஆதாரங்களை கொண்டுள்ளனர்.தேவைப்படும் போது அதனை சட்டநடவடிக்கைகளுக்காக பயன்படுத்த  அவர்கள் தயாராகவே உள்ளனர்.ஆனால்,மாஹாட்சீர் காலிட் அம்னோவின் பிடியில் இருக்கும் உள்நாட்டு ஊடகங்களை நம்பச் சொல்வதும் ஒருவகை கோமாளிதனம்தான் என்றார்.

இன்றைய நடப்பியல் சூழலில் நவீனத்துவமும் அறிவியலும் ஊடகத்துறையின் பெரும் வளர்ச்சியாய் இருக்கும் நிலையில் வெளிநாட்டு ஊடகங்கள் மீது அடிப்படையற்ற குற்றங்களை சுமத்துவது அநாவசியமானது என்றும் நாட்டின் அம்னோவின் பிடியில் ஆளுமைக் கொண்டிருக்கும் டிவி3,உத்துசான் மலேசியா உட்பட சில ஊடகங்களின் மீது மலேசியர்கல் நம்பிக்கை இழந்துள்ள வேளையில் அதனை நம்பச் சொல்வது விவேகமற்ற செயலாகும் என்றார்.

இன்றைய ஊடகங்களின் எதார்த்த தன்மையையும் அதன் ஜனநாயகத்தன்மையையும் மாஹாட்சீர் காலிட் உட்பட அம்னோவும் தேசிய முன்னணியும் ஏற்றுக் கொள்ளதான் வேண்டும் என நினைவுறுத்திய அவர் உலக நிலையில் கல்வி மேம்பாட்டில் சரியான இலக்கின்றி கிடக்கும் மலேசிய கல்வி துறை மேம்பாட்டு வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டிய கல்வி அமைச்சரான மாஹாட்சீர் காலிட் தேவையற்ற கருத்தினை வெளியிடாமல் நாட்டின் கல்வி துறையில் கூடுதல் கவனம் செலுத்துவதே விவேகம் என்றும்  டான் கார் ஹிங் ஆலோசனை கூறினார்.

 

 


Pengarang :