ஷா ஆலம், ஜூலை 13:
நாட்டின் மாமன்னர் சுல்தான் முகமட் V அதிகாரப்பூர்வ பிறந்த நாள் விழா கொண்டாட்டம் ஜூலை 29-இல் இருந்து செப்டம்பர் 9-க்கு மாற்றப்பட்டது.
பிரதமர் துறை வெளியிட்ட அறிக்கையில் இது கூறப்படுகிறது. இந்த மாற்றம் இரண்டாவது முறையாக நடைபெறுவது வழக்கத்திற்கு மாறாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஏப்ரல் மாதத்தில் மேன்மை தங்கிய மாமன்னரின் அதிகாரப்பூர்வ பிறந்த நாள் விழா ஜூன் மாதத்தில் முதல் வார சனிக்கிழமையில் இருந்து ஜூலை கடைசி வார சனிக்கிழமைக்கு மாற்றப்பட்டதாக பிரதமர் துறை அறிவிப்பு செய்தது.
ஏப்ரல் 26-இல் வெளியிட்ட அறிக்கையில், 2017, 2018 மற்றும் 2019 ஆண்டுகளில் முதல் வார ஜூன் சனிக்கிழமைகள் நோன்பு மாதத்தில் இருப்பதால் மாற்றம் செய்வதாக பிரதமர் துறை கூறியது.
#கேஜிஎஸ்