RENCANA PILIHANSELANGOR

ஸ்ரீ மீனாட்சி ஆலய உடைப்பில் மாநில அரசாங்கம் சம்பந்தப்படவில்லை

ஷா ஆலம், ஜூலை 13:

கிள்ளான் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேசுவரர் ஆலயம் உடைபட்டதாக அகப்பக்கத்தில் வெளியான தகவல்களுக்கும் மாநில அரசாங்கத்திற்கும் சம்பந்தமில்லை என்று மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் வீ. கணபதி ராவ் கூறினார். கடந்த செப்டம்பர் 10, 2013-இல் இரு தரப்பு ஒத்துழைப்புடன் எடுக்கப்பட்ட நீதிமன்ற முடிவின் அடிப்படையில் நில உரிமையாளர் உடைக்கும் நடவடிக்கையில் இறங்கினார் என்பதே உண்மை நிலவரம் என்று கணபதி ராவ் விளக்கம் அளித்தார்.

ஆலய நிர்வாகம் நீதிமன்ற முடிவை ஏற்றுக் கொண்டு  HS(M)6131 எண் PT 22301 மற்றும்  HS(M) 6173  PT 22343 என்ற  நில உரிமம் கொண்ட நிலத்தில் ரிம 80,000 பெற்று ஆறு மாதத்தில் இடம்பெயர்ந்த விடுவதாக உறுதி கொடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

Ganabatirau

 

 

 

 

 

”  ஆலய நிர்வாகம், ஒத்துக்கொண்ட நீதிமன்ற முடிவை மதிக்காமல் நடந்து கொண்டதால் நில உரிமையாளர் கடந்த ஏப்ரல் 16-இல்  புதிய நீதிமன்ற ஆணையைக் கொண்டு, இன்று உடைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆலயம் உடைக்கும் நடவடிக்கையில் தனிப்பட்ட குத்தகைதாரர்கள் மற்றும் காவல்துறை உதவியோடு நில உரிமையாளர் செய்து உள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம், மாநில அரசாங்கம் இந்த சம்பவத்தில் சம்பந்தப்படவில்லை என்று உறுதியாக தெரிகிறது. இது தனியார் நில உரிமையாளர் மற்றும் ஆலய நிர்வாகம் ஒத்துக்கொண்ட நீதிமன்ற ஆணையின் மூலம் எடுக்கப்பட்ட நடவடிக்கை,” என்று தனது அறிக்கையில் கூறினார்.

 

kuil

 

 

 

 

 

 

 

 

 

 

 

இதற்கு முன்பு, சில தேசிய முன்னணி ஆதரவு அகப்பக்கங்கள் மாநில அரசாங்கம் ஆலயத்தை உடைத்து விட்டதாக செய்தி பரப்பி வந்தது குறிப்பிடத்தக்கது. பின்வரும் பல பொய்யான தகவல்களை இந்த அகப்பக்கங்கள் வெளியிட்டுள்ளதை காண முடிகிறது.

” மாநில அரசாங்கம் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேசுவரர் ஆலயத்தை இன்று காலை உடைத்து விட்டனர்,”

”  முன்பு பின் அரசாங்கம் ஒரு கோயிலை உடைத்ததால் எல்லோரும் குரல் கொடுத்தனர்.  இன்று தினந்தோறும் பாக்காத்தான் கோயிலை உடைத்து கொண்டு இருக்கின்றனர். ஆனால் அனைவரும் அமைதியாக இருக்கிறார்கள்,”

”  பாக்காத்தான் ஆட்சியில் கோயில்கள் உடைக்கப்படாது. எல்லா கோயில்களும் பதிவு செய்யும் என்று வாக்குறுதி அளித்தது. ஆனால், இன்று நடந்து கொண்டிருக்கின்றது?

”  சிலாங்கூர் வாக்காளர்களே, உங்களுக்கு பன்மடங்கு பாராட்டுகள்,”

இந்த வாசகங்களோடு படங்களையும் இணைத்து பிஎன் மற்றும் மஇகாவினரும் அகப்பக்கத்தில் மாநில அரசாங்கத்தின் மீது மாசுபடுத்தி வருவதை நாம் கண்கூடாக பார்க்கலாம்.

#கேஜிஎஸ்


Pengarang :