SELANGOR

15,000 ஸ்ரீ அண்டாலாஸ் தொகுதி மக்கள் ஐபிஆர் மூலம் பலன் பெற்றுள்ளார்கள்

ஷா ஆலம், ஜூலை 13:

ஸ்ரீ அண்டாலாஸ் சட்ட மன்ற தொகுதி மக்களில் 15,000 பேர் பரிவுமிக்க மக்கள்நல செயல்பாடுகள் (ஐபிஆர்) மூலம் பலன் பெற்றுள்ளனர்.

SHAH ALAM, 13 JUL: 15,000 warga Dewan Undangan Negeri (DUN) Seri Andalas menerima pelbagai manfaat daripada pelaksanaan dasar Inisiatif Peduli Rakyat (IPR) sejak ia dilaksanakan. ஐபிஆர் தொடங்கியது முதல், தனது மக்கள் சேவை மையம் மற்றும் மாநில அரசாங்கத்தின் ஒத்துழைப்போடு வெற்றிகரமாக திட்டங்களை மக்களிடையே சென்று சேர்ந்திருக்கிறது என்று ஸ்ரீ அண்டாலாஸ் சட்ட மன்ற உறுப்பினர் டாக்டர் சேவியர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

”   ஸ்ரீ அண்டாலாஸ் தொகுதி மக்கள் ஐபிஆர் மூலம் பலன் பெற்று மாற்றத்தை ஏற்படுத்தி வருகின்றனர். இது வரையில் மாநில அரசாங்கத்தின் மக்கள் நலத் திட்டங்களான ஐபிஆரின் மூலம் 15,000 பேர் நன்மை அடைந்துள்ளனர்,” என்று தெரிவித்தார்.

XAVIER TURUN PADANG

 

 

 

 

 

 

இதற்கு முன்பு ஐபிஆர், ‘மாநில வளம் மக்களுக்கே’ அல்லது எம்இஎஸ் என்று அழைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.  2008-இல் இருந்து எம்இஎஸ் அறிமுகப்படுத்தி வந்தது. 2014-இல் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி தலைமையின் கீழ் ஐபிஆர் என்று மறுசீரமைப்பு செய்யப்பட்டு 38 மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தி வருவதை கண்கூடாக பார்க்கிறோம்.

ஐபிஆர் திட்டங்களில் மரண சகாய நிதி, சிலாங்கூர் பாரம்பரிய குழந்தைகள் திட்டம், மகளிர் சுகாதார திட்டம், ஹிஜ்ரா சிலாங்கூர், இளையோர் திருமண நிதி, உணவுப் பொருட்கள் திட்டம், சிலாங்கூர்கூ வீடுகள், ஸ்மார்ட் சிலாங்கூர் பேருந்து சேவை, பெடுலி சேஹாட் சுகாதார அட்டை திட்டம் மற்றும் இலவச இணையச் சேவை போன்றவை அடங்கும்.

#கேஜிஎஸ்


Pengarang :