SELANGOR

ஒருமைப்பாட்டை வளர்ப்போம், இனங்களிடையே நல்லிணக்கத்தை நிலைநாட்டுவோம்

அம்பாங், ஜூலை 31:

சிலாங்கூர் மாநில அரசாங்கம் ஏற்பாடு செய்து வரும் திறந்த இல்ல நிகழ்வு இனங்களிடையே நல்லிணக்கத்தையும் மற்றும் ஒருமைப்பாட்டையும் மேலும் மேம்படுத்த ஒரு உறவுப் பாலமாக விளங்கும் என்று சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி கூறினார். ஒருங்கிணைந்த செயல்பாடுகள் சிலாங்கூரின் வெற்றிக்கு அடித்தளமாக அமைகிறது. இனங்களிடையே ஏற்படும் ஒருமைப்பாடு சிலாங்கூரின் பொருளாதார வளர்ச்சிக்கு மூலதனமாக இருந்து வருகிறது என்று பெருமிதத்தோடு கூறினார்.

IMG_20170730_143149

 

 

 

 

 

 

”  நோன்பு பெருநாள் திறந்த இல்ல நிகழ்வில் இஸ்லாமியர்கள் மட்டும் கலந்து கொள்ளவில்லை மாறாக இந்தியர்கள் மற்றும் சீனர்கள் பெருவாரியாக வருகை புரிந்தனர். சிலாங்கூர் மாநிலம் பல்வேறு இனங்கள் மற்றும் பண்பாடு நிறைந்து காணப்படுகிறது. ஆனாலும் ஒருமித்த சிந்தனையை மனதில் ஏற்று மாநில அரசாங்கத்தின் நிலைத்தன்மையை உறுதி செய்கிறது,” என்று மாநில ஆட்சிக் குழு உறுப்பினரும் செம்பாக்கா சட்ட மன்ற உறுப்பினருமான டத்தோ இஸ்கண்டர் அப்துல் சமத் அம்பாங் ஜெயா நகராண்மை கழகத் திடலில் ஏற்பாடு செய்த நோன்பு பெருநாள் திறந்த இல்ல நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போது கூறினார்.

இதனிடையே, அஸ்மின் அலி பொருளாதார ஊக்குவிப்பு திட்டங்கள் வெற்றி அடைந்து வரும் வேளையில் மக்களுக்கு சிறந்த முறையில் சேவையாற்றிடவும் மற்றும் மாநில மேம்பாட்டுக்கும் வித்திடும் என்பதில் சந்தேகமில்லை என்று கூறினார்.

#கேஜிஎஸ்


Pengarang :