MEDIA STATEMENT

விசாரணை அறிக்கையை மட்டும் திறக்க வேண்டாம், எஸ்பிஆர்எம் அதை செயல்படுத்த வேண்டும்

தேசிய தணிக்கை இலாகாவின் அறிக்கை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணை மேலும் துரிதப்படுத்த உதவும். ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோக நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களை நீதிமன்றத்தில் நிறுத்த வழி வகுக்கும். நாட்டின் நிதி நிர்வாகத்தை சீர்குலைத்த சதிகாரர்களை அடையாளம் காட்ட முடியும்.

ஒவ்வொரு வருடமும் தேசிய தணிக்கை இலாகா அறிக்கை வெளியிடப்படும். அதில் பல்வேறு நிர்வாகக் கோளாறுகளை எடுத்து வைக்கிறது. ஆனாலும் மத்திய அரசாங்கம் இதுவரை அக்கறை கொண்டதாக தெரியவில்லை. இது ஒன்றும் முதல் தடவையாக அரசாங்கத்தின் பலவீனங்களை தணிக்கை இலாகா கூறவில்லை, மாறாக ஒவ்வொரு வருடமும் திரைப்படத்தில் வரும் திரைக்கதை வசனம் போல அறிக்கையில் எடுத்து வைத்திருக்கிறது என்பதை மறந்து விடாதீர்கள்.

எங்கே தவறு நடக்கிறது? மூல காரணகர்தாவாக இருப்பது யார்? இது மனித தவறுகளா அல்லது மனிதனின் பலவீனங்களா? நிர்வாகத்தில் இருக்கும் அதிகாரிகள் காரணமா? அல்லது நடப்பில் உள்ள நிர்வாக அமைப்பு மற்றும் நடைமுறை காரணமா?

1.  சிறப்பு செயல் அதிகாரிகளை நியமிக்கப்பட்டு விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்பட்டதா? ஊழல் தடுப்பு ஆணையம் கடுமையான நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை நீதிக்கு முன் நிறுத்தப் பட வேண்டும்.

2. அம்னோ தேசிய முன்னணி அரசாங்கம் வீண்செலவு செய்யும் பணம் மக்களின் மீது சுமத்திய ஜிஎஸ்டி வரிக்கு நிகரானது. இந்த வீண் விரதத்தை நிறுத்தினால், இதன் மூலம் சேமித்த பணத்தில் மக்களுக்கு செலவிடலாம். ஜிஎஸ்டி வரி விரிவாக்கம் தேவையில்லை.

3. இமாலய ஊழலான 1 மலேசியா மேம்பாட்டு நிறுவனத்தின் (1எம்டிபி) மோசடிகளை அனைத்து சம்பந்தப்பட்ட நாடுகளும் விசாரணை நடத்தி வரும் நிலையில் நம் நாட்டில் உள்ள ஊழல் தடுப்பு ஆணையம் மற்றும் விசாரணை செய்ய வேண்டிய காவல்துறை மற்றும் பேங்க் நெகாரா மௌனம் சாதித்து வருவது விந்தையாக இருக்கிறது.

4. நம் நாட்டு மக்களுக்கு நடந்த சம்பவம் குறித்து தெரியப் படுத்த வேண்டும். பண மோசடி மற்றும் நிர்வாகக் கோளாறுகள் சம்பந்தமாக விளக்கம் அளிக்க அரசாங்கம் கடமைப்பட்டுள்ளது. அப்படி பணத்தை கையாடல் செய்திருந்தால் செயல்பாடுகளை உடனடியாக நிறுத்தப் பட வேண்டும்.

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் டத்தோ சூல்கிப்லி அமாட் பதவியில் அமர்ந்து ஒரு வருடம் ஆகிறது. நம் நாட்டு மக்களின் நம்பிக்கையை இழக்கும் அபாயத்தில் இருக்கும்போது அரசு ஊழியர்கள் குறிப்பாக சூல்கிப்லி கீழ் செயல்படும் ஊழல் தடுப்பு ஆணையம் லஞ்ச ஊழலில் சம்பந்தப்பட்ட நபர்கள் யாராக இருந்தாலும் நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

தான் கார் ஹேங்

சிம்பாங் பூலாய் சட்ட மன்ற உறுப்பினர்

#தமிழாக்கம் கு.குணசேகரன்


Pengarang :