SELANGOR

மாநில அரசாங்க தலைமையகத்தின் பணியாளர்கள் பொது போக்குவரத்து சேவைகளை பயன்படுத்த ஊக்குவிக்கும் இரண்டாம் கட்ட முயற்சிகள்

அம்பாங், ஆகஸ்ட் 6:

சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் தலைமையகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் பொது போக்குவரத்து சேவைகளை பயன்படுத்த ஊக்குவிக்கும் இரண்டாம் கட்ட நிலைக்கு வந்துள்ளது என்று சிலாங்கூர் மாநில முதலீடு, தொழிற்துறை & வணிகம், சிறு & நடுத்தர தொழில் மற்றும் போக்குவரத்து ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ தேங் சாங் கிம் கூறினார். 50 பணியாளர்களை சம்பந்தப்பட்ட இத்திட்டத்தில் சைக்கிள் மற்றும் பொது போக்குவரத்து சேவையை வாரத்தில் ஒரு முறை பயன்படுத்த வேண்டும் என்று தேங் தெரிவித்தார்.

”   மாநில தலைமையகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் பொது போக்குவரத்து சேவைகளை வாரத்தில் ஒரு முறை பயன்படுத்த முயற்சிக்கு வாழ்த்துக்கள். அடுத்து நாம் இரண்டாம் கட்ட நிலைக்கு செல்ல இருக்கிறோம். தற்போது 50 பேரில் இருந்து 100 பணியாளர்கள் பொது போக்குவரத்து சேவைகளை தினந்தோறும் பயன்படுத்த ஊக்குவிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்,” என்று அம்பாங் ஜெயா நகராண்மை கழக டத்தாரான் டிரான்ஸிட்டில் நடைபெற்ற அம்பாங் ஜெயா நகராண்மை கழக ஸ்மார்ட் சிலாங்கூர் பேருந்து இலவச பேருந்து சேவை திட்டத்தை தொடக்கி வைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு கூறினார்.

தேங் மேலும் கூறுகையில், இத்திட்டம் பொது மக்களை பொது போக்குவரத்து சேவைகளை ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளது என்றும் சாலை நெரிசலை தவிர்க்க முடியும் என்று விவரித்தார்.

#கேஜிஎஸ்


Pengarang :