SELANGOR

பரிவு மிக்க மக்கள் நல திட்டங்களை சிலாங்கூர் தொடர்ந்து வருகிறது

ஷா ஆலம், ஆகஸ்ட் 31:

சிலாங்கூர் மாநிலத்தை மேம்பாடு அடைந்த மாநிலமாக தொடர்ந்து விளங்கும் முயற்சியில் பரிவு மிக்க மக்கள் நல திட்டங்களை அமல்படுத்தி வரும் வேளையில் சுதந்திர உணர்வு மேலோங்கி இருக்கும் மாநில இளையோர் மேம்பாடு, விளையாட்டு, பண்பாடு மற்றும் தொழில் முனைவர் மேம்பாட்டு ஆட்சிக் குழு உறுப்பினர் அமிரூடின் ஷாரி கூறினார். மேம்பாட்டு திட்டங்கள் மக்களுக்கு பயனுள்ளதாக அமைய சிலாங்கூர் மக்கள் ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை நிலைநாட்ட வேண்டும் என்றார்.

”   இந்த ஆண்டு, மலேசியா மக்களின் 60-வது சுதந்திர தின கொண்டாட்டம் ஒற்றுமை மேலோங்கி இருக்கும் வேளையில் மக்கள் நல்லிணக்கத்தை பேணிக் காக்க வேண்டும். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தீயசக்திகளை வேரோடு பிடுங்கி எறிந்து விட வேண்டும். அப்படி இல்லை என்றால் நாடு குட்டிச்சுவராக்கி விடுவார்கள். இந்த சுதந்திர போராட்டங்கள் நமக்கு நல்ல ஒரு பாடமாக அமையும். புதிய மலேசியாவை உருவாக்க சுதந்திர உணர்வு மேலோங்கி இருக்க வேண்டும்,” என்று சுதந்திர வாழ்த்துச்செய்தியில் கூறினார்.

yb-zaidy

 

 

 

 

 

 

இதனிடையே, சிலாங்கூர் மாநில உள்கட்டமைப்பு, பொது வசதிகள், நவீன விவசாயம் மற்றும் விவசாய அடிப்படை தொழில் ஆட்சிக் குழு உறுப்பினர் ஜைடி அப்துல் தாலிப் கூறுகையில், மக்கள் சுதந்திரத்தை முழுமையாக புரிந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

”   சுதந்திரம் என்றால் வெறும் காலனித்துவ ஆட்சியிலிருந்து விடுபடுவது அல்ல, மாறாக நமது சிந்தனைகள் மற்றும் எண்ணங்கள் சுதந்திரமாக செயல்பட வேண்டும்,” என்று சிலாங்கூர் இன்றுக்கு கூறினார்.

சிலாங்கூர் மாநில சட்டமன்ற சபாநாயகர் ஹான்னா  இயோ கூறுகையில், 60-வது சுதந்திர தினம் சிலாங்கூர் மக்களுக்கு நல்ல ஒரு விடிவெள்ளியாக அமையும் என்று கூறினார்.

#கேஜிஎஸ்


Pengarang :