NATIONAL

பத்து தீகா தோல் சாவடியை அப்புறப்படுத்தி மக்களுக்கு விடுதலை கொடுங்கள்

ஷா ஆலம், செப்டம்பர் 1:

மத்திய அரசாங்கம் மக்களுக்கு உணர்வுபூர்வமான விடுதலை அளிக்க பத்து தீகா தோல் சாவடியை அப்புறப்படுத்த வேண்டும். மேலும் இதுவரை இரகசியமாக வைக்கப்பட்டுள்ள தோல் கட்டண ஒப்பந்தத்தை பொது மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று பத்து தீகா சட்ட உறுப்பினர் ரோஸ்ஸியா இஸ்மாயில் கூறினார். 2018-இல் முடிவுறும் தோல் கட்டண ஒப்பந்தம் ஏன் இன்னும் தொடரப் படுகிறது என்று மக்களுக்கு விளக்கம் அளிக்க புத்ரா ஜெயா கடமைப்பட்டு உள்ளதாக கூறினார்.

”   தோல் கட்டணத்தை கட்டுப்படுத்த தோல் சாவடியை நிர்வகிக்கும் நிறுவனங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கூற்று ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. மத்திய அரசாங்கம் பில்லியன் கணக்கில் இழப்பீடு வழங்குவது ஏன் என்று தெரியவில்லை,” என்று சிலாங்கூர் இன்றுக்கு கூறினார்.

தோல் கட்டண ஒப்பந்தங்களும் தோல் சாவடியை நிர்வகிக்கும் நிறுவனங்களுக்கு பயன் அளிக்கும் வகையில் இருப்பதாக தெரிவித்தார்.

Rodziah

 

 

 

 

 

இழப்பீடு தொகை நெடுஞ்சாலை நிர்மாணிப்பு செலவை விட பல மடங்கு அதிகமாக இருக்கிறது.

”   புத்ரா ஜெயா நிர்வாகம் மாற்றம் காணும் போது எல்லா தோல் சாவடிகளும் கட்டம் கட்டமாக மூடப்படும், அதில் சுங்கை ராசா மற்றும் பத்து தீகா தோல்சாசாவடிகளும் அடங்கும். பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி தேவையில்லாத தோல் சாவடிகளை அகற்றும்,” என்று கூறினார்.

இதற்கு முன்பு, பிளஸ் நிறுவனம் பத்து தீகா மற்றும் சுங்கை ராசா தோல் சாவடிகளின் கட்டண வசூலை 2018-இல் முடியும் நிலையில் மேலும் 2038 வரை நீட்டிப்பு செய்தது குறிப்பிடத்தக்கது.

#கேஜிஎஸ்


Pengarang :