SELANGOR

மாற்றத்தை ஏற்படுத்த முடியும்

ஷா ஆலம், செப்டம்பர் 5:

சிலாங்கூர் மாநிலத்தை திறன் மிக்க முறையில் நிர்வகிக்கும் சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி நாட்டில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று வட மலேசியா பல்கலைக் கழகத்தின் அனைத்துலக சட்டத்துறை இணை பேராசிரியர் முனைவர் முகமட் அஸிஸுடின் முகமட் சானி கூறினார். சிலாங்கூர் மாநில மந்திரி பெசாருக்கு 14-வது பொதுத் தேர்தலில் சரியான முறையில் வாய்ப்பு வழங்க வேண்டும் என்றார்.

மாநிலத்தில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்திய அஸ்மின் அலி, மலேசியா மக்களின் எதிர் பார்ப்பை கண்டிப்பாக நிறைவேற்ற முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்பதை சுட்டிக் காட்டி னார்.

”   இளையோர்கள் நாட்டின் தலைமைத்துவத்தை வழி நடத்த இதுவே சரியான தருணம். இதற்கு சிலாங்கூர் மந்திரி பெசார் தகுதியான வேட்பாளர். பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியில் மட்டுமில்லை தேசிய முன்னணி கூட்டணியில் இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் கைரி ஜமாலுதீன் சிறந்த தலைமைத்துவத்தை கொண்டுள்ளார். நாட்டு மக்களுக்கு இவர்கள் இருவரின் நிர்வாகத் திறமை கவர்ந்துள்ளது. இளையோரின் நாடித் துடிப்பு புரிந்து திட்டங்களை செயல்படுத்தி வருவதை கண்கூடாக பார்க்கிறோம். இளைய தலைமுறையினரிடம் நாட்டின் நிர்வாகத்தை ஒப்படைக்க வேண்டிய சூழ்நிலை உருவாகி விட்டது,” என்று தெரிவித்தார்.

AZMIN

 

 

 

 

 

இதனிடையே மேலும் கூறுகையில், மலேசியா, பிரான்ஸ் மற்றும் கனடா போன்ற நாடுகளின் இளைய தலைவர்கள் நாட்டை வழி நடத்தும் விதத்தை முன்மாதிரியாகக் கொண்டு இளையோருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி சிலாங்கூர் மந்திரி பெசாராக செப்டம்பர் 23, 2014-இல் சிலாங்கூர் சுல்தானின் ஆசியோடு டான்ஸ்ரீ காலிட் இப்ராஹிமிற்கு பதிலாக பதவி ஏற்றது குறிப்பிடத்தக்கது.

#கேஜிஎஸ்


Pengarang :