SELANGOR

பொது மக்கள் அமலாக்க பிரிவு அதிகாரிகளின் பணியை புரிந்து கொள்ள வேண்டும்

சுபாங் ஜெயா, செப்டம்பர் 12:

சுபாங் ஜெயா சட்ட மன்ற உறுப்பினர் ஹான்னா இயோ, சுபாங் ஜெயா நகராண்மை கழகத்தின் துணை அமலாக்க அதிகாரி, நோர் சாபுவான் நோர்டின் (வயது 31) தமக்கு ஏற்பட்ட இக்கட்டான சூழ்நிலையிலும் உணர்ச்சி வசப்படாமல் நேர்மையான முறையில் பணியை செய்த நடவடிக்கை கண்டு பாராட்டுவதுடன் மட்டுமில்லாமல் பெருமிதம் கொள்வதாக கூறினார்.

அமலாக்க பிரிவு அதிகாரிகள் தங்களின் கடமையை நிறைவேற்றும் பொது போக்குவரத்து பாதிக்கப்படாமல்  இருக்க உறுதி செய்யும் நிலையில் பல்வேறு குறைகூறல்களை எதிர் நோக்க நேரிடும் என்றார்.

”   சுபாங் ஜெயா நகராண்மை கழகத்தின் அமலாக்க பிரிவு அதிகாரியான நோர் சாபுவான் நடவடிக்கையை கண்டு பூரிப்பு அடைவதாகவும், எனது பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். அமலாக்க பிரிவு அதிகாரிகள் தங்களின் கடமையை நிறைவேற்றும் பொது நேர்மறையான செயல்பாடுகள் கொண்டு பணியாற்ற வேண்டும். யாரும் தங்களின் வாகனத்தை பூட்டு போட விட மாட்டார்கள். ஆனாலும், இந்த பிரிவின் அதிகாரிகள் பணி மிகவும் கடினமான ஒன்று. பொது மக்கள் அவர்களின் கடமையை புரிந்து கொள்ள வேண்டும்,” என்று கூறினார்.

Wanita_Steering_Lock

 

 

 

 

கடந்த வாரம், நோர் சாபுவான் பூட்டு போடப் பட்ட வாகனத்தின் பெண் உரிமையாளரின் கோபத்திற்கு ஆளாக நேரிட்ட காணோளி சமுக வலைதளங்களில் பரவி இருந்தது குறிப்பிடத்தக்கது.

MPSJ

 

 

 

 

 

ஹான்னா இயோ மற்றும் கின்னாரா சட்ட மன்ற உறுப்பினர் எங் ஸி ஹான், நோர் சாபுவானுக்கு நற்சேவை சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சியில் சுபாங் ஜெயா நகராண்மை கழகத்தின் தலைமையகத்தில் கலந்து கொண்டனர். நகராண்மை கழகத்தின் துணைத் தலைவர் முகமட் ஸூல்கார்னாயின் சீ அலி உடன் இருந்தார்.

#கேஜிஎஸ்


Pengarang :