NATIONAL

அஸ்மின்: முன்னாள் ராணுவ வீரர்களின் கோரிக்கை ஏற்புடையது

ஷா ஆலம், செப்டம்பர் 17:

மலேசிய பரிவுமிக்க முன்னாள் பாதுகாப்பு படையினர் இயக்கத்தின் (பாலாவான்) கோரிக்கைகளை பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி புத்ரா ஜெயாவை கைப்பற்றும் நிலையில் நிறைவேற்ற முடியும் என்று சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி கூறினார். மாநில அரசாங்கம் முன்னாள் ராணுவ வீரர்களின் கோரிக்கையை அமல்படுத்த முடியாத சூழ்நிலை ஏனெனில் மத்திய அரசாங்கமே இதனை செயல்படுத்த முடியும் என்றார்.

”   நான், மத்திய அரசாங்கத்தின் சார்பில் உத்தரவாதத்தை கொடுக்க முடியாது. நவம்பர் மாதத்தில் அப்படி புத்ரா ஜெயாவை கைப்பற்றினால் கண்டிப்பாக சாத்தியமாகும்,” என்று பாலாவான் இயக்கத்தின் தலைவர் அஸ்ரி புவாங் நேற்று சுல்தான் அலாம் ஷா பொருட்காட்சி சாலையில் நடைபெற்ற ‘சிலாங்கூர் மந்திரி பெசாருடன் புதிய மலேசியா’ எனும் விவாத மேடையில் அவரின் கேள்விக்கு பதில் அளிக்கையில் மேற்கண்டவாறு கூறினார்.

IMG_20170916_165501

 

 

 

 

 

இதற்கு முன்பு, பாலாவான் பல தடவை மத்திய அரசாங்கத்தை முன்னாள் ராணுவ வீரர்களின் சமூக நலம் மற்றும் அவர்களின் சேவைக்கு அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுப்பியது அனைவரும் அறிந்ததே. நாட்டிற்காக போராடிய ராணுவ வீரர்களின் அர்ப்பணிப்பு மதிக்கப்பட வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கை, இது வரை மத்திய போராட்டத்தினால் புறக்கணிக்கப் பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சிலாங்கூர் இன்றுவின் ஆய்வின் அடிப்படையில், ஐந்து கோரிக்கைகள் எழுந்துள்ளன:-

1. முன்னாள் ராணுவ வீரர்களின் ஓய்வூதியம் தற்போதைய சம்பள அளவில் வழங்கப்பட வேண்டும்

2. ஓய்வூதியம் இல்லாத முன்னாள் ராணுவ வீரர்களுக்கு வருடாவருடம் ரிம 6000 கொடுக்கப் பட வேண்டும்

3. ஓய்வூதிய தொகை இறப்புக்கு பின் வாரிசுகளுக்கு தொடர்ந்து வழங்கப்பட வேண்டும்

4. ஓய்வூதியம் மறுசீரமைப்பு செய்யப் பட வேண்டும். உடல் ஊனமுற்ற ராணுவ வீரர்களுக்கு இழப்பீடு தொகை வழங்க வேண்டும்.

5. ஒவ்வொரு ராணுவ வீரர்களின் பதவி ஓய்வுக்கு பிறகு நிலங்கள்/ வீடுகள் வழங்க வேண்டும்

#கேஜிஎஸ்


Pengarang :