ANTARABANGSA

அக்டோபர் மாதத்தில் திடீர் பொதுத் தேர்தல்

தோக்கியோ, செப்டம்பர் 17:

ஜப்பானின் பிரதமர், ஷின்ஸொ அபே அக்டோபர் மாதத்தில் தேர்தலை நடத்த திட்டமிட்டுள்ளார். தனது அரசாங்கத்தின் மீது ஆதரவு அதிகரித்த வேளையில் மற்றும் எதிர்க்கட்சிகளின் இடையே ஏற்பட்ட பிளவும் இதற்கு காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அபே மீது ஜப்பான் மக்களிடையே 50% ஆதரவு ஏற்பட்டுள்ளது. மேலும் வட கொரியா நடத்திய எரிபடை சோதனை மற்றும் அணு ஆயுத பரிசோதனை ஆகியவை மக்களுக்கு பெரும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது என்று அனைத்துலக செய்தி நிறுவனமான ரியூட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஜனநாயக கட்சியில் ஏற்பட்ட பிளவுகள் ஆதரவை குறைந்து கொண்டே வருகிறது. கட்சியின் தலைவர்கள் வெளியேறி வருவது தொடர்ந்து அபே மீது ஆதரவை அதிகரித்து வருகிறது. அபே தனது கூட்டணியான மிதவாத ஜனநாயக கட்சியின் தலைவர்களான கொமேய்தோ மற்றும் நாட்சூவோ யாமாகூட்சி ஆகியோரிடம் கூடிய சீக்கிரம் பொதுத் தேர்தல் நடத்த நாடாளுமன்றத்தை கலைக்க இருப்பதாக கூறியது குறிப்பிடத்தக்கது.

* மலேசியாவில் தற்போது இதே சூழ்நிலை உருவாகி இருக்கிறது. நஜிப் தைரியத்துடன் இதே போன்று செய்வாரா?

#கேஜிஎஸ்


Pengarang :