SELANGOR

சிலாங்கூரில் முதலீடு அதிகரிப்பு

ஷா ஆலம், செப்டம்பர் 20

சிலாங்கூரில் தனது வர்த்தகத்தை மேற்கொண்டு வரும் அமெரிக்க முதலீட்டு நிறுவனம் ஒன்று அதன் வர்த்தகத்தை மேலும் விரிவாக்கம் செய்வதோடு அதன் முதலீட்டையும் அதிகரிக்க முன் வந்துள்ளது என மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முகமட் அஸ்மின் அலி குறிப்பிட்டார்.மிக குறுகிய காலக்கட்டத்தில் அந்த முதலீடு அதிகரிப்பு நிகழப்போவதாகவும் அவர் மேலும் கூறினார்.

இதுகுறித்த வெளிப்படையான பகிர்வினை தாம் வெளியிடுவதாக கூறிய அவர் சம்மதப்பட்ட நிறுவனம் தற்போது இங்கு தன் வர்த்தகத்தை மேற்கொண்டு வரும் நிலையில் சிலாங்கூர் மாநிலம் முக்கிய வர்த்தக மையமாக உருமாறி வரும் நிலையில் அந்நிறுவனம் அதன் முதலீட்டை அதிகரிக்க முன் வந்திருப்பதாகவும் கூறினார்.இந்த முதலீட்டி அதிகரிப்பினை மாநில அரசு மகிழ்ச்சியோடு வரவேற்பதாகவும் அஃது விரைந்து நிகழ வேண்டும் என்றும் கூறினார்.

இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஆக்கபூர்வமான ஒப்பந்தங்களுக்கு பின்னர் வெளியிடப்படும் என்றும் கூறிய மந்திரி பெசார் அவை அக்டோபர் மாதம் தொடக்கத்தில் நிகழலாம் என்றார்.சம்மதப்பட்ட நிறுவனம் தனது அலுவலகத்திற்கு நேரில் வந்து தங்களின் வர்த்த முதலீடு அதிகரிப்பு குறித்து பேசியது மேலும் நம்பிக்கையை ஏற்படுத்தியிருப்பதாகவும் கூறினார்.

இருப்பினும்,சம்மதப்பட்ட நிறுவனம் தங்களின் முதலீட்டு ஏதுவாக நிலப்பரப்பளவு தேவைப்படுவதாகவும் அதற்கு மாநில அரசின் உதவியை நாடியிருப்பதையும் சுட்டிகாண்பித்த அவர் இது தொடர்பில் அடுத்தக்கட்ட நவடிக்கையினை மேற்கொள்ளுமாறும் மாநில பொருளாதார திட்டமிடல் பிரிவிற்கு தெரிவித்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.

சம்மதப்பட்ட நிறுவனம் விண்வெளி தொடர்பிலான துறைசார்ந்தது என்றும் அதன் உற்பத்தி,பராமரிப்பு, பழுது மற்றும் செயல்பாடு ஆகியவை அதில் அடங்கும் என்றும் தெரிவித்த மந்திரி பெசார் இது தொடர்பில் விரைந்து முடிவெடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.இதுவொரு முக்கிய முதலீடாக இருப்பதால் இது குறித்து விரைந்து முடிவெடுக்கப்பட வேண்டும் என்றும் கூறிய அவர் இதற்கு முன்னதால ஐகேஇஎ (IKEA) நிறுவனத்தின் 1 பில்லியன் முதலீடு குறித்து மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு கையொப்பம் குறித்தும் விளக்கினார்.
சம்மதப்பட்ட நிறுவனம் அதன் மிக பெரிய கொள்முதல் மையத்தை இங்கு அமைக்கவிருப்பதோடு அதன் மூலம் அஃது ஆசியா பசிபிஃகில் மாபெரும் வர்த்தக நடவடிக்கையினை மேற்கொள்ளவிருப்பதாகவும் கூறினார்.இஃது அந்நிறுவனத்தின் மிக பெரிய பொருள் வைக்கும் கிடங்காக அமையும் என்றும் மந்திரி பெசார் கூறினார்.

#ரௌத்திரன்


Pengarang :