SELANGOR

நீதிமன்றத்தின் தீர்ப்பு, மாநிலஅரசாங்கத்திற்கு சாதகமாக அமையும் என்று எதிர்பார்க்கப் படுகிறது

புத்ரா ஜெயா, செப்டம்பர் 27:

மாநில அரசாங்கம், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு சிலாங்கூர் வாக்காளர்களுக்கு நீதி கிடைக்கும் வகையில் இருக்கும் என்று நம்பிக்கை இருப்பதாக சிலாங்கூர் மாநில சுற்றுலா, சுற்றுச் சூழல், பசுமை தொழில் நுட்பம் மற்றும் பயனீட்டாளர் நலன் ஆட்சிக் குழு உறுப்பினர் எலிசபெத் வோங் கூறினார். மாநில அரசாங்கத்தின் வழக்கறிஞர்கள் மிகச்சிறந்த முறையில் வழக்கில் வாதாடியதாக தெரிவித்தார்.

”   இது வரை, மாநில அரசாங்க வழக்கறிஞர்களின் வாதம் மிகச்சிறந்த நிலையில் உள்ளது. நமக்கு வெற்றி பெறும் சாத்தியம் பெரும் அளவில் இருக்கிறது. இதற்கு முன், மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் அநீதி நடந்துள்ளது. ஆனாலும் உச்ச நீதிமன்றத்தில் சிலாங்கூர் வாக்காளர்களுக்கு கண்டிப்பாக நீதி கிடைக்கும்,” நீதிமன்ற மாளிகையின் வளாகத்தில் செய்தியாளர் கூட்டத்தில் பேசினார்.

இதனிடையே, சிலாங்கூர் மாநில அரசாங்கம் மலேசிய தேர்தல் ஆணையத்திடம் 136,000 வாக்காளர் விவரங்கள் அழிக்கப்பட்ட முழுமையான பட்டியலை கோரியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆனாலும், உச்ச நீதிமன்றம் நாளைக்கு வழக்கின் தீர்ப்பை வழங்க இருப்பதாக தெரிவித்தது.

#கேஜிஎஸ்


Pengarang :