2746769 26.11.2015 Зенитно-ракетный комплекс С-400 во время заступления на боевое дежурство на российской авиабазе Хмеймим для обеспечения безопасности полетов российской авиагруппы в Сирии. Дмитрий Виноградов/РИА Новости
Uncategorized @ta

சவூதி அரேபியா ரஷ்யாவிடமிருந்து ஆயுதங்களை வாங்குகிறது

அனைத்துலகம், அக்டோபர் 7:

நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்தும் நடவடிக்கையில் சவூதி அரேபியா
ரஷ்யாவிடமிருந்து ஆயுதங்களை வாங்க முடிவு செய்துள்ளது. இதன் வழி,
தற்காப்புக்காக ஆயுதங்கள் பெறுவதில் அமெரிக்காவை நாடி  நின்ற சவூதி
அரேபியா ரஷியா பக்கம் திரும்பியுள்ளது. இது ரஷ்ய வரலாற்றில் ஒரு புதிய
பதிவாகும்.

வான் பாதுகாப்பு அமைப்பானவற்றுள் ஒன்றான எஸ்.400 போர் விமான எதிர்ப்பு
ஏவுகணை, கோர்னெட் போர் தாங்கி  எதிர்ப்பு ஏவுகணை, பல் முனைய ராக்கெட்
செலுத்தி ஆகிய தற்காப்பு சார்ந்த ஆயுதங்களை ரஷ்யாவிடமிருந்து பெறுகிறது
சவூதி. அந்நாட்டு அரசன், ராஜா சல்மான் அப்துல் அசிஸ் அல் -சவுட்
ரஷியாவுக்கு வருகை மேற்கொண்ட போது இதனை அறிவித்தாக சர்வதேச செய்தி
நிலையமான அல்  ஜஸீரா செய்தி கூறுகிறது.

இதன் தொடர்பான உடன்படிக்கை இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்தானது.
முதலீடு மற்றும் ஒத்துழைப்பு ரீதியாலான சந்திப்பு இது.

கையெழுத்தான பில்லியன் தொகை உடன்படிக்கையில் பாதுகாப்பு அமைப்பிலான
முதலீடு ரஷ்யா பொருளாதாரத்தை மீட்கும். அப்போது கச்சா எண்ணெயின்  விலை
வீழ்ச்சியும், மேற்கு நாடு பொருளாதாரத் தடைகளும் ரஷ்யா பொருளாதாரத்துக்கு
ஒரு பின்னடைவாகும் .

சவூதி அரேபியாவின் பிரதிநிதிக்குழுவின் விஜயம் ஒரு வரலாற்று நிகழ்ச்சியாக
ஜனாதிபதி விளாடிமிர் புடினின்ர
விவரித்தார்.

உலகப்  பொருளாதாரத்தை மேம்படுத்த, அமைதி மற்றும் பாதுகாப்பு அம்சம்
தொடர்பில்  ரஷ்யாவுடனான உறவை வலுப்படுத்த விரும்புவதாக ராஜா சல்மான்
தெரிவித்தார். மத்திய கிழக்கில் ஏற்பட்டு வரும் மோதல்களில் ஈராக்
தலையிடக் கூடாது என்று சல்மான் கூறினார்.

வளைகுடா மற்றும் மேற்காசிய நாடுகளின் பாதுகாப்பு , நிலைத்தன்மை,  ஏமன்
நாட்டில் அமைதியை ஏற்படுத்த ஒரு வலியுறுத்தல் என்றார் சல்மான். இந்த
நிலைமை ஈரான் உள் விவகாரங்களில் தலையிடுவதையும் பிராந்தியத்தில்
நிலைத்தன்மையைக் குலைக்கும் நடவடிக்கையையும்  தவிர்க்கச் செய்ய
வற்புறுத்தும் என்று சல்மான் கூறினார்.

#சரவணன்

Pengarang :