PBTSELANGOR

“விவேகமான மாநிலம் 2025” இலக்கை காஜாங் நகராண்மைக் கழகம் மெய்பிக்கிறது

காஜாங், அக்டோபர் 11:

சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் “விவேகமான மாநிலம் 2025” எனும் தூரநோக்கு இலக்கினை காஜாங் நகராண்மைக் கழகம் தொடர்ந்து மெய்பித்து வருகிறது.அந்நிலையில் காஜாங் நகராண்மைக் கழகம் தொடர்ந்து பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களையும் மக்களுக்கான ஆக்கப்பூர்வ செயல்திட்டங்களையும் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகவும் தெரிய வந்துள்ளது.
தொடக்கத்தில் சிறு நகரமாய் இருந்த காஜாங் பகுதி பின்னர் பல்வேறு மேம்பாடுகளாலும் ஆற்றல் மிக்க செயல் திட்டங்களாலும் புதியதொரு தலம் நோக்கி பயணிக்க தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

1997இல் காஜாங் நகரம் காஜாங் நகராண்மைக் கழகமாக அங்கீகரிக்கப்பட்டது முதல் 2017ஆம் ஆண்டில் அஃது சுமார் 25வது ஆண்டில் கால் பதிக்கும் இன்றைய சூழலில் பல்வேறு மாற்றங்கள்,வளர்ச்சிகள் மற்றும் மேம்பாடுகளை துள்ளியமாய் எட்டியுள்ளது. கடந்த 2008ஆம் ஆண்டு முதல் இன்றைய டத்தோஸ்ரீ அஸ்மின் அலியின் தலைமையிலான சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் கீழ் காஜாங் நகராண்மைக் கழகம் துரித வளர்ச்சியின் உச்சத்தை எட்டியிருப்பதை மறுத்திட முடியாது.மக்கள் விரும்பி வாழு நகரமாகவும் வெளிநாட்டினரின் கவனத்தை ஈர்த்த நகரமாகவும் காஜாங் நகர் விளங்கிடும் அதேவேளையில் நகர்வாசிகள் விரும்பி வசிக்கும் நகராகவும் காஜாங் திகழ்கிறது என்பதை காஜாங் நகராண்மைக் கழகத்தின் தலைவர் முகமட் சாயுதி பக்கர் பெருமிதமாய் கூறினார்.

அதேவேளையில்,நாட்டின் தலைநகரான கோலாலம்பூர் பெரும் நகரின் எல்லையோடு ஒட்டியிருக்கும் காஜாங் அனைத்து நிலையிலும் சரியான ஒரு தலமாக அமைந்திருப்பதோடு அஃது வேலை வாய்ப்பு.பொருளாதார மேம்பாடு,வர்த்தக வாய்ப்பு என ஒவ்வொரு நிலையிலும் தனித்துவ சிறப்பினையும் சூழலையும் துள்ளியமாய் கொண்டிருப்பது காஜாங் நகரத்தின் சிறப்பிற்கு மேலும் சிறப்பு சேர்க்கிறது.

காஜாங் நகரம் மக்கள் புலக்கம் அதிகம் கொண்ட நகரமாக் விளங்கிடும் அதேவேளையில் அஃது தொடர்ந்து பல்வேறு மேம்பாடுகளை மேற்கொள்வதோடு காஜாங் நகரம் மக்கள் விரும்பி வசிக்கும் நகரமாய் உருமாற்றம் செய்வதற்கு ஏதுவாக பல்வேறு வசதிகளையும் மேம்பாடுகளையும் உருவாக்குவதில் தீவிர முனைப்பு காட்டி வருவதாகவும் முகமட் சாயுதி பக்கர் குறிப்பிட்டார்.மேலும்,தனியார் நிறுவனங்கள் வீடமைப்பு உட்பட மேம்பாட்டு திட்டங்களை கொண்டு வரவும் காஜாங் நகராண்மைக் கழகம் வாய்ப்பு அளிப்பதாகவும் பொது போக்குவரத்து சேவைகளையும் தொடர்ந்து மேம்படுத்தி வருவதாகவும் கூறினார்.

மேம்பாட்டு நகரம் காஜாங் நகரம் தொடர்ந்து துரித வளர்ச்சியும் மேம்பாடும் கொண்ட நகரமாய் திகழ்ந்து வருகிறது.அதன் மேம்பாடுகள் சிலாங்கூர் மாநிலத்தின் பிற ஊராட்சிதுறைகளோடு ஒப்பிடுகையில் தனித்துவமாய் விளங்குகிறது.காஜாங் நகரம் பெரும் நகரமாய் உருவெடுத்து வரும் அதேகாலக்கட்டத்தில் அதனை சுற்றிலும் சிறு சிறு நகரங்கள் தொடர்ந்து மேம்பாடு கண்டும் வருகிறது.வணிகத்தலங்களும் வீடமைப்பு பகுதிகளும் நாளுக்கு நாள் பெரும் முன்னேற்றத்தை நோக்கி நகர்ந்துக் கொண்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

முன்மாதிரியான ஊராட்சித்துறை
நகராண்மைக் கழகமாக உருவெடுத்து 20ஆம் ஆண்டை எட்டியிருக்கும் காஜாங் நகராண்மைக் கழகம் சிலாங்கூர் மாநிலத்தின் இதர ஊராட்சிதுறைகளுக்கு முன் மாதிரியாக திகழ்வதாக சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முகமட் அஸ்மின் அலி பெருமிதமாய் குறிப்பிட்டார்.காஜாங் நகராண்மைக் கொண்டிருக்கும் தொடர் மேம்பாட்டு நடவடிக்கைகளை இதர ஊராட்சிதுறைகளும் பின் பற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.காஜாங் நகராண்மைக் கழகம் இந்நகரை பயன்மிக்கதாகவும் சிறந்த பங்களிப்புத்துவத்தை கொண்ட நகரமாகவும் உருமாற்றி வரும் நிலையில் ஆற்றல் மிக்க நகரமாகவும் காஜாங் திகழ்வதாக தெரிவித்தார்.

பொது மண்டபம் காஜாங் மற்றும் அதன் சுற்றுவட்டார மக்களின் நன்மைக்காகவும் அவர்களின் அனைத்து நிலையிலான நடவடிக்கைகளுக்காகவும் காஜாங் நகராண்மைக் கழகம் ஆங்காங்கே பல்வேறு பொது மண்டபங்களை அமைத்திருப்பதோடும் தொடர்ந்து அமைத்தும் வருகிறது. இம்மாதிரியான பல்நோக்கு மண்டபங்கள் சகல வசதிகளையும் கொண்டிருப்பதையும் உறுதி செய்யப்படுவதாகவும் அறியப்படுகிறது.

ஸ்மார்ட் சிலாங்கூர் பேருந்து
பொது போக்குவரத்தில் தனித்துவ கவனம் செலுத்தி வரும் காஜாங் நகராண்மைக் கழகம் இந்நகரில் பல்வேறு பொது போக்குவரத்து வசதியினை ஏற்படுத்தியிருந்தாலும் மாநில அரசாங்கத்தின் விவேகமான திட்டமான ஸ்மார்ட் சிலாங்கூர் பேருந்து சேவை மக்களின் தனித்துவ ஆதரவை பெற்றிருப்பதோடு காஜாங் வாழ் மக்களின் அன்றாட தேவைகளில் இன்றியமையாத ஒன்றாக அஃது விளங்குகிறது.மேலும்,இதன் மூலம் சாமானிய மக்களின் சமூகநலன் காக்கப்படுவதோடு அவர்களின் பொருளாதார நிலைக்கு பெரும் உதவியாக விளங்க முடிகிறது.ஸ்மாட் சிலாங்கூர் பேருந்து சேவை சமூகநலன் திட்டத்தின் ஒரு பகுதியாக காஜாங் நகரை

பெருமைப்படுத்துகிறது.
வெள்ளப் பிரச்னைக்கு தீர்வு
பெரும் நகரை நோக்கி துரித மேம்பாட்டினை நோக்கி பயணிக்கும் காஜாங் நகரம் மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ளத்தை தடுக்கவும் அப்பிரச்னைக்கு நிரந்திர தீர்வுகாணவும் காஜாங் நகராண்மைக் கழகம் ஆக்கப்பூர்வமான தூரநோக்கு செயல்பாட்டினை மேற்கொண்டிருப்பது வெள்ளப் பிரச்னைக்கு தீர்வாக அமைக்கிறது.
வெள்ளப் பிரச்னைக்கான காரணியத்தை காஜாங் நகராண்மைக் கழகம் பல்வேறு ஆய்வுகளின் அடிப்படையில் கண்டறிந்துள்ள நிலையில் அதனை முறைப்படுத்தி தொடரும் இப்பிரச்னைக்கு தீர்வினை ஏற்படுத்துவதில் அஃது வெற்றியும் கண்டுள்ளது.தொடர்ந்து மக்கள் காஜாங் நகராண்மைக் கழகத்தை வெள்ளம் ஏற்படும் போது குறை சொல்வதை தடுக்கவும் மக்களுக்கு நல் சூழல் கொண்ட நகரை உருவாக்கிக் கொடுக்கவும் பல்வேறு நடவடிக்கையினை காஜாங் நகராண்மைக் கழகம் துள்ளியமாய் மேற்கொண்டு வருகிறது.இனி வருங்காலங்களில் காஜாங் நகரம் வெள்ளப் பிரச்னை இல்லா நகரமாய் உருவெடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

காஜாங் நகராண்மைக் கழகம் அதன் 20ஆம் ஆண்டு நிறைவினை எட்டியுள்ள நிலையில் அஃது தொடக்கம் முதல் சந்தித்து வந்த சவால்களும் போராட்டங்களும் எழுத்தில் அவ்வளவு எளிதில் பதிவு செய்து விட முடியாது.காலத்திற்கு ஏற்ற மாற்றங்களை மக்களின் நல் வாழ்விற்காக பெரும் திட்டங்கள் வாயிலாக அதனை உருவாக்கிக் கொடுத்திருக்கும் காஜாங் நகராண்மைக் கழகம் சிலாங்கூர் மாநிலத்தில் தனித்துவமான ஊராட்சித்துறை என்பதில் துளியும் ஐயமில்லை.

காஜாங் வாழ் மக்களின் நலனின் அக்கறைக் கொண்டு திறன் மிக்க நடவடிக்கைகளை மக்களின் மேம்பாட்டு வளர்ச்சிக்காகவும் வசதிகளுக்காகவும் உருவாக்கிக் கொடுத்து இன்றைய நவீனத்துவ சூழலில் புதிய தலம் நோக்கி வெற்றிகரமான இலக்கை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும் காஜாங் நகராண்மைக் கழகத்திற்கு காஜாங் வாழ் மக்களின் ஆதரவும் அவர்களின் ஒவ்வொரு முன் நகர்வுக்கும் பெரும் ஒத்துழைப்பும் இருத்தல் காலத்தின் கட்டாயமாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Pengarang :