Uncategorized @ta

வரவு செலவு 2018: மாநில அரசாங்கம் புதிய கல்வித் திட்டத்தை அறிமுகப் படுத்தும்

பண்டார் ஸ்ரீ புத்ரா, அக்டோபர் 21:

சிலாங்கூர் மாநில அரசாங்கம் எதிர் வரும் 2018-இன் வரவு செலவு திட்டத்தில் புதிய கல்வி நன்முயற்சிகளை அறிமுகப்படுத்த உள்ளது என்று சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி கூறினார். மாநில அரசு, சிலாங்கூர் மேம்பாட்டில் கல்வி மிக இன்றியமையாதது எனில்  எப்போதும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறது என்று விவரித்தார்.

”  மாநில அரசாங்கம் எதிர் வரும் நவம்பர் 3-இல் 2018 வரவு செலவு திட்டத்தை மாநில சட்ட மன்றத்தில் தாக்கல் செய்ய இருக்கிறது. பெடுலி சிஸ்வா மற்றும் கல்வி மையங்கள் வரவு செலவுத் திட்டத்தில் அடிப்படையாக கொண்டு தாக்கல் செய்யப்படும். சில புதிய கல்வி நன்முயற்சிகளை அறிமுகப்படுத்தி சிலாங்கூர் மாநில கல்வி மேம்பாடு மேலும் சிறந்த அடைவு நிலையை எட்டும்,” என்று சிலாங்கூர் அனைத்துலக இஸ்லாமிய கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசினார்.

 


Pengarang :