NATIONAL

பிரீம் நகர ஏழைகளுக்கு உதவுவதில் தோல்வியை அடைந்துள்ளது

கோலா லம்பூர், நவம்பர் 22:

1 மலேசியா உதவித்தொகை (பிரீம்) மற்றும் நகர நல்வாழ்வு மையம் ஆகிய மத்திய அரசாங்கம் அமல்படுத்திய திட்டங்கள் தற்காலிக நிவாரணமே தவிர, நகர ஏழைகள் மற்றும் வீடுகள் இல்லாதவர்களின் எதிர் நோக்கும் சிக்கல்களை தீர்க்க தவறிவிட்டது என்று லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினர் நூருல் ஈசா அன்வார் கூறினார். இந்த விடயத்தில் மத்திய அரசாங்கம் சரியான தீர்வு காண வேண்டும் இல்லை என்றால் இந்த சிக்கல்கள் தொடரும் என்றார்.

”   கோலா லம்பூர் மாநகர மன்றம் (டிபிகெஎல்) வெளியிட்டுள்ள புள்ளி விவரப்படி 2014-இல் வீடு இல்லாதவர்கள் எண்ணிக்கை 600. இந்த எண்ணிக்கை 2016-இல் 2000 ஆக உயர்வு கண்டது. இது தொடர்ந்து 5000 ஆக உயரும் என்று கணக்கிடப்படுகிறது. தற்போதைய கேள்வி இப்பிரச்சினைகளைக் களைவதற்கு மத்திய அரசாங்கம் என்ன நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது? துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ ஜாஹிட் அமீடி கீழ் அமைந்துள்ள நடவடிக்கை குழு ஆய்வறிக்கைகளில் உள்ள ஆலோசனைகளை சீர்தூக்கி பார்க்கவில்லையா?”, என்று இன்று காலையில் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.

#வீரத் தமிழன்


Pengarang :