SELANGOR

சிறந்த நிதி நிர்வாகம் போதிக்கப் படும்

ஷா ஆலம், 28 ஏப்ரல்: சிலாங்கூர் மக்கள் விழிப்புணர்வு சங்கத்தின்  (ஃபிகிர்) நிதி நிர்வாக விழிப்புணர்வு கருத்தரங்கங்களை மே மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை  ஏற்பாடு செய்துள்ளது.

ஃபிகிர் சங்கத்தின் தலைவர், யாமின் யாஹ்யா கூறுகையில் சிலாங்கூர் மாநில வீடமைப்பு, கட்டிட நிர்வாகம் மற்றும் நகர வாழ்வு ஆட்சிக் குழுவின் ஒத்துழைப்போடு மலிவு விலை வீடமைப்பு மக்களை இந்த விழிப்புணர்வு திட்டத்தில் பங்கேற்க அழைக்கிறது.இந்த திட்டம்  மக்களின் நிதி நிர்வாகத் திறனை மேம்படுத்தும்.

“பிரசாரங்களை மிகவும்  அனுபவம் வாய்ந்த நிதி நிர்வாக தன்னார்வ நிபுணர்கள் மக்களுக்கு வழிகாட்டியாக இருப்பார்கள். இந்த விழிப்புணர்வு மிகவும் அவசியம், ஏனெனில் மலேசியா மக்கள் குறிப்பாக இளையோர் திவாலாகி விடுவது  ஆகும். இதற்கு முக்கிய காரணம்  இளம் வயதிலேயே சரியான முறையில் திட்டமிட்டு செலவு செய்யவில்லை,” என்றார்

 

இந்நிகழ்ச்சியில் மாநில வீடமைப்பு, கட்டிட நிர்வாகம் மற்றும் நகர வாழ்வு ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ இஸ்கண்டர் அப்துல் சமத்தும் கலந்து கொண்டார்.

 


Pengarang :