RENCANA PILIHANSELANGOR

“சுக்” வெள்ளம் , மேம்பாட்டு நிறுவனத்திற்கு எச்சரிக்கை

அம்பாங், 17 ஏப்ரல்: சுங்கை பிசி-உலு கிள்ளான்  அடுக்குமாடி நெடுஞ்சாலை திட்ட நிறுவனத்திற்கு  அண்மையில் புக்கிட் தெராத்தாய் பகுதியில்  ஏற்பட்ட வெள்ளம் காரணமாக கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மாநில மந்திரி பெசார், டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி கூறுகையில் மேம்பாட்டு நிறுவனம் பொறுப்பாகவும் மாநில அரசாங்கத்தின் விதிமுறைகளையும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும் அறிவித்தார்.

இந்த திடீர் வெள்ளம் மாநில அரசாங்கம் மிக முக்கியமாக கருதி  ஆட்சிக் குழுக் கூட்டத்தில் பேசியதாகவும் மேம்பாட்டாளர்கள் கண்டிப்பாக விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றார்.

“நீர் சேமிப்பு குளம்  இந்த விதிமுறைகளில் முக்கியமானதாகும். மேலும் மேம்பாடு செய்வதற்கு முன்பாக இதைச் செய்திருந்தால் திடீர் வெள்ளத்தை தவிர்த்து இருக்கலாம்.”

 

Azmin

 

 

 

 

 

 

 

 

மேம்பாட்டாளர்கள் இலாபத்தை மட்டும் நோக்கமாக இல்லாமல் மக்களின் உறுதி  செய்யும்படி கேட்டுக் கொண்டார். பொறுப்புள்ள நிறுவனங்கள் மக்களின் பாதுகாப்பை துச்சமாக மதித்து நடக்க வேண்டும் என்றும் இலாபத்தை ஈட்டுவதே குறிக்கோளாக இருக்க கூடாது என்றும் நினைவுறித்தினார்.

” மேலும் நகராண்மை கழகத்திற்கு வெள்ள துப்புரவு பணிகளிளால் நேரத்தையும் செலவீணங்களையும் எதிர் நோக்கும் வேளையில் மேம்பாட்டு நிறுவனங்கள் மிக எளிதாக தப்பித்து விடுகின்றனர்.”

” இந்த  எச்சரிக்கை மாநில  ஆட்சிக் குழுவில் முடிவு செய்யப்பட்டதாகவும் சம்பந்தப்பட்டவர்கள் மேற்கண்ட விதிமுறைகளை பொறுப்புடன் பின்பற்ற வேண்டும்” என்று சிறந்த பணியாளர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கூறினார்.

இரண்டு மாதத்தில்  இரண்டாம் முறையாக அதே இடத்தில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

எம்பிஎஜே “வேலை நிறுத்த கட்டளை” அறிவித்துள்ளது  என்று அதன் தொடர்பு  அதிகாரி நோர்யாத்தி அமாட் கூறினார்.

-NFN-


Pengarang :