RENCANA PILIHANSELANGOR

ஐபிஆர் மற்றும் எம்இஎஸ் மறுஆய்வு, சிலாங்கூர் ஏழ்மை ஒழிப்பு நடவடிக்கையில் தீவிரம்

ஷா ஆலம், மே 19:

ஏழ்மை ஒழிப்பு நடவடிக்கை குழு சிலாங்கூர் மாநில பொருளாதார திட்டப் பிரிவுடன் வட்ட மேசை பேச்சுவார்த்தை நடத்தி சிலாங்கூர் மாநில மக்களிடையே நிலவும் ஏழ்மையை ஒழிக்க வழி வகுக்கும் என்று நடவடிக்கை குழுவின் தலைவர் ஷாரி சுங்கிப் தெரிவித்தார். இந்த பேச்சுவார்த்தை பரிவுமிக்க மக்கள்நல செயல்பாடுகள் (ஐபிஆர்) மற்றும் சிலாங்கூர் பொருளாதாரம் மக்களுக்கே  (எம்இஎஸ்) ஆகிய இரண்டு திட்டங்களும் 30% ஏழைகளின் சிக்கல்களை தீர்வு கண்டுள்ளதை மதிப்பீடு செய்ததாக கூறினார்.

Saari Sungib

 

 

 

 

 

 

 

 

 

” 30% ஏழைகளின் சிக்கல்களை எம்இஎஸ் திட்டங்களின் வழி தீர்க்கும் ஆய்வு மற்றும் மதிப்பீடு செய்து வருகிறோம். நாம் எல்லா தரப்பு மக்களையும் சந்தித்து ஏழ்மை ஒழிப்பு நடவடிக்கை மற்றும் அதை எதிர் கொள்ளும் சிறந்த வழிமுறையை பற்றி கலந்து ஆலோசித்தோம்,” என்று கூறினார்.

உலு கிள்ளான் சட்ட மன்ற உறுப்பினரான ஷாரி, ஏழ்மை ஒழிப்பு நடவடிக்கை குழு கூட்டத்திற்கு பின் என்னக்ஸ் கட்டிடத்திற்கு வெளியே சிலாங்கூர் இன்றுவிடம் தெரிவித்தார். இன்றைய கூட்டத்தின் சாரத்தை வெளியிட முடியாது என்றும் சிலாங்கூர் சட்டமன்ற கூட்டத்தில் தாக்கல் செய்த பிறகே வெளியிட முடியும் என்று விவரித்தார்.

ஆனாலும் ஷாரி தெரிவிக்கையில், மாநில அரசாங்கம் சிறந்த நடவடிக்கைகள் மூலம் ஏழ்மை ஒழிப்பை தீர்க்க முயற்சிகள் எடுத்து வருகிறது என்றார். இன்று வரை 38 செயல்பாடுகள் 17 ஐபிஆர் மூல திட்டங்கள் வழி மாநில அரசாங்கம் செயல் பட்டு வருகிறது என்றால் மிகையாகாது.

2008-இல் இருந்து மாநில அரசாங்கம் ரிம 1.9 பில்லியன் செலவில் மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் அமல்படுத்தி விட்டது குறிப்பிடத்தக்கது.


Pengarang :