SELANGOR

பிஆர்1எம்ஏ & பிபிஏ1எம் போன்ற சிறப்பு சலுகைகள் புத்ராஜெயா விரோத போக்கை தொடர்ந்தால், ரத்து செய்யப்படும்

ஷா ஆலம், ஜூன் 23:

1 மலேசியா மக்கள் வீடமைப்பு (பிஆர்1எம்ஏ) மற்றும் 1 மலேசியா அரசு ஊழியர் வீடமைப்பு (பிபிஏ1எம்) போன்ற மத்திய அரசாங்கத்தின் கீழ் செயல்படும் வீடமைப்பு திட்டங்கள் மாநில அரசாங்கத்தோடு விரோத போக்கு கொண்டு செயல்பட்டால் சிறப்பு சலுகைகள் ரத்து செய்யப்படும் என்று சிலாங்கூர் மாநில வீடமைப்பு, கட்டிட நிர்வாகம் மற்றும் நகர நல்வாழ்வு ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ இஸ்கண்டர் அப்துல் சமத் நினைவுறுத்தினார்.

பிஆர்1எம்ஏ மற்றும் பிபிஏ1எம் ஆகிய வீீடமைப்பு திட்டங்கள் சிலாங்கூர் மாநில வீடமைப்பு திட்டமான ‘சிலாங்கூர்கூ வீடு’ போன்ற அம்சங்கள் கொண்டதாக உள்ளது என்று கூறினார். ஒரு ஏக்கரில் 120 வீடுகள் கட்ட சிறப்பு அனுமதி தந்திருக்கிறார்கள் என்றும் மற்ற வீடமைப்பு திட்டத்தில் ஒரு ஏக்கரில் 30 -இல் இருந்து 70 வீடுகள் வரை கட்ட மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருந்தது  என்றும் விவரித்தார்.

இதனிடையே, எதிர் வரும் மாநில ஆட்சிக் குழு கூட்டத்தில் இந்த ரத்து செய்யும் முடிவை தாம் தாக்கல் செய்ய இருப்பதாக கூறினார். மாநில அரசாங்கதோடு மத்திய அரசாங்கம் குறிப்பாக நோ ஒமாரின் கீழ் செயல்படும் அமைச்சு விரோத போக்கை இது வரை கடைபிடித்து வருகிறது என்று தெரிவித்தார்.

ISKANDAR SAMAD

 

 

 

 

 

மேலும் கூறுகையில், இஸ்கண்டர் இந்த நடவடிக்கை பிஆர்1எம்ஏ மற்றும் பிபிஏ1எம் ஆகிய வீீடமைப்பு திட்டங்களைை சிலாங்கூரில் தடை செய்ய அல்ல மாறாக மக்களின் சிரமங்களை தீர்க்க அம்னோ தேசிய முன்னணி அரசாங்கம் நேரிடையாக அரசியல் ரீதியில் மோதும் போக்கை மாற்றிக் கொள்ளவேண்டும் என்ற எண்ணத்தில் தான் என்று கூறினார்.

#கேஜிஎஸ்


Pengarang :