MEDIA STATEMENTRENCANA PILIHAN

பிரதமர் சரவாக் ரெப்போட் குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்க வேண்டும்

கடந்த மே 31 அன்று சரவாக் ரெப்போட் வெளியிட்ட குற்றச்சாட்டு அடிப்படையில் ரிம 9.5 மில்லியன் எஸ்ஆர்சி இண்டர்நேசனல் பணத்தை பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் ரசாக் அம்னோ வழக்கறிஞர் டான்ஸ்ரீ ஷாஃபி அப்துல்லாவின் வங்கி கணக்கில் மாற்றியதாக கூறப்படுகிறது கடுமையானதாக கருதுகிறேன். ஆனால் இன்று வரை பிரதமர் நஜிப் மற்றும் ஷாஃபி எந்த ஒரு பதிலையும் கூறாமல் அமைதி காக்கும் செயலை கண்டு வருத்தமாக இருக்கிறது.

இதுவரை, மலேசிய மக்கள் சுற்றுலா துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ நஸ்ரி அஸிஸ் அவர்களின் நம்பமுடியாத விளக்கத்தை மட்டுமே கேட்டு இருக்கிறோம். இதில் மூல காரணம் என்ன வென்று பதில் சொல்லவில்லை. எஸ்ஆர்சியின் இண்டர்நேசனல் ஏன் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் தனிப்பட்ட வங்கி கணக்கில் மாற்றி, பிறகு ஷாஃபி வங்கி கணக்கில் மாற்ற வேண்டிய அவசியம் என்ன?

நஜிப் சரியான விளக்கம் அளிக்கும் வரையில் பொது மக்களுக்கு,  பணம் ஷாஃபி வங்கி கணக்கில் மாற்றம் செய்தது அன்வார் இப்ராஹிம் அவதூறு 2 வழக்கில் முடிவை மாற்ற வேண்டும் என்ற எண்ணமே இருக்கும்.

Jawab

 

 

 

 

 

இதனிடையே, நஜிப்பின் இந்த நடவடிக்கையானது பண மோசடி தடுப்பு சட்டத்தின் (அம்லா 2014) கீழ் தவறு செய்ததாகவே நாம் கருதலாம். ஆக, பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி தலைவர்கள் எதிர் வரும் ஜூன் 9-இல் நடைபெறும்   கூட்டணியின்  தலைமைத்துவ கூட்டத்தில் விவாதிக்கப்படும். உண்மையை கண்டு பிடிக்க அனைத்து சட்ட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

 

 

* டத்தோ ஸ்ரீ டாக்டர் வான் அஸிஸா வான் இஸ்மாயில் 

நாடாளுமன்ற எதிர்கட்சி தலைவர்

கெஅடிலான் கட்சியின் தலைவர்
4 Jun 2017


Pengarang :