RENCANA PILIHANSELANGOR

மாநில அரசு ஊழியர்களுக்கு 2 மாத போனஸ் – மந்திரி பெசார் அறிவிப்பு

ஷா ஆலாம் – சிலாங்கூர் மாநில அரசு ஊழியர்களுக்கு இவ்வாண்டு நோன்பு பெருநால் கொண்டாட்டம் பெரும் மகிழ்ச்சியானதாய் அமையும் என்பதில் துளியும் ஐயமில்லை.சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முகமட் அஸ்மின் அலி அரசு ஊழியர்களுக்கான 2 மாத போனஸ்சை அறிவித்திருப்பது அவர்களின் இவ்வாண்டு நோன்பு பெருநாளை மேலும் அர்த்தமுள்ளதாய் வகைப்படுத்தியுள்ளது எனலாம்.

அரசு ஊழியர்களுக்கான 2 மாத போனஸ் அறிவிப்பை இன்று மந்திரி பெசார் அதிகாரப்பூர்வமாய் அறிவித்தார்.கடந்தாண்டு அரசு ஊழியர்களுக்கு 1 1/2 மாத சிறப்பு நிதியினை ஒதுக்கிய மந்திரி பெசார்ட் இவ்வாண்டு 2 மாத போனஸ்க்காக 2 மாத சிறப்பு நிதியினை ஒதுக்கியுமுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

அறிவிக்கப்பட்ட சிறப்பு நிதி வரும் ஜுன் 21ஆம் தேதி தொடக்கம் வழங்கப்படும்.சுமார் 17,703 மாநில அரசு ஊழியர்களுக்கு வெ.63.3மில்லியன் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதேவேளையில்,மாநில அரசு ஊழியர்கள் மற்றும் இலாகாகளின் நன் செயல்பாடு அதன் ஆக்கப்பூர்வ பங்களிப்பினை சீர்த்தூக்கிப்பார்த்து ஆண்டு இறுதியிலும் மற்றுமொரு சிறப்பு நிதியினை வழங்குவது குறித்தும் மாநில அரசு ஆலோசித்து வருவதாக மந்திரி பெசார் மேலும் தெரிவித்தார்.இது தொடர்பில் மாநில தலைமை செயலாளருடன் கலந்தாலோசிப்பதாகவும் குறிப்பிட்டார்.

 

இன்னும் ஆறு மாதத்தில் தனி மனித செயல்பாடுகளுடன் அவர்கள் சார்ந்த இலாகா மற்றும் துறைகளின் பங்களிப்பு செயல்பாடு மற்றும் அவர்களின் ஆக்கப்பூர்வ பணிகளை கணக்கில் கொண்டு இந்த சிறப்பு நிதியினை வழங்கிட மாநில அரசு ஆலோசித்து வருவதாகவும் இந்த சிறப்பு நிதி இதுவரை மாநில அரசு ஊழியர்கள் கண்டிடாத ஒன்றும் எனவும் அவர் பெருமிதமாய் குறிப்பிட்டார்.

IMG_7129 IMG_7242


Pengarang :