SAINS & INOVASI

2030-இல் ஜப்பான் விண்வெளி வீரரை சந்திரனுக்கு அனுப்பும்

தோக்கியோ, ஜூலை 1:

ஜப்பான் தனது புதிய விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தின் பரிந்துரையின் பேரில் 2030-இல் சந்திரனுக்கு விண்வெளி வீரரை அனுப்ப உத்தேசித்து உள்ளது என்று அனைத்துலக செய்தி நிறுவனமான ஏஎப்ஃபி வெளியிட்டுள்ள அறிக்கையின் வழி தெரிவித்துள்ளது.

முதல் தடவையாக ஜப்பான் விண்வெளி ஆராய்ச்சி நிலையம் விண்வெளி வீரர் ஒருவரை அனைத்துலக விண்வெளி மையத்தின் எல்லைகளை தாண்டி அனுப்ப நடவடிக்கையில் இறங்கி இருப்பதாக செய்திகள் வெளி வந்துள்ளன.

இந்தத் திட்டம் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையமான, நாசாவுடன் ஒருங்கிணைந்து சந்திரனை சுற்றி ஒரு விண்வெளி ஆராய்ச்சி மையம் அமைத்து செவ்வாய் கிரகத்திற்கு செல்லும் தூர நோக்கு திட்டத்தை தீட்டி உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தோக்கியோ, இந்த நடவடிக்கை அனைத்துலக ரீதியில் ஒத்துழைப்பு மற்றும் ஜப்பானின் தொழில் நுட்பத்தை மற்ற நாடுகளோடு பகிர்ந்து கொள்ள வழி வகுக்கும் என்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஜப்பான் நாட்டின் முயற்சி, சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் சுய முயற்சியின் மூலம் விண்வெளி திட்டங்களை செயல்படுத்தி வருவதை ஆராய்ந்து முடிவு எடுத்துள்ளது. கடந்த நவம்பரில் சீன நாட்டின் விண்கலமான ஷென்சௌ-11, பூமிக்கு இரண்டு விண்வெளி வீரர்களுடன் வெற்றிகரமாக தரையிறங்கியது. நாசா மற்றும் சில விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்கள் செவ்வாய் கிரகத்திற்கு விண்வெளி வீரர்களை அனுப்பும் சாத்தியத்தை ஆராய்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

#கேஜிஎஸ்


Pengarang :