RENCANA PILIHANSELANGOR

சிலாங்கூர் பழத்தோட்ட பள்ளத்தாக்கு ரிம 200 மில்லியன் மதிப்பிலான விளைச்சலை கொடுக்கும்

கோலா சிலாங்கூர், ஜூலை 9:

சிலாங்கூர் பழத்தோட்ட பள்ளத்தாக்கு அடுத்த ஆறு அல்லது ஏழு ஆண்டுகளில் ரிம 200 மில்லியன் மதிப்பிலான விளைச்சலை கொடுக்கும் என்று சிலாங்கூர் விவசாய மேம்பாட்டு நிறுவனத்தின் (பிகேபிஎஸ்) தலைமை நிர்வாகி தம்பி ஒமார் முகமட் கூறினார். கடந்த ஆண்டில் ரிம 7 மில்லியனில் இருந்து ரிம 8 மில்லியன் வரை விளைச்சலை கொடுத்ததாக கூறினார். இந்த விளைச்சல் அடுத்த மூன்றாண்டுகளில் ரிம 20 மில்லியனாக உயரும் ஆற்றலை சிலாங்கூர் பழத்தோட்ட பள்ளத்தாக்கு கொண்டுள்ளது என்றார்.

”   டுரியான் தோட்டம் மற்றும் கஹாரூ தோட்டம் அறுவடை செய்யும் நிலையில் இருப்பதாகவும், மீன் வளர்ப்பு அடுத்த ஆறு ஆண்டுகளில் விற்பனைக்கு தயாராக இருக்கும். பிகேபிஎஸ், சிலாங்கூர் பழத்தோட்ட பள்ளத்தாக்கு மூலம் ரிம 150 மில்லியனில் இருந்து ரிம 200 மில்லியன் வரையில் விளைச்சலை கொடுக்கும் ஆற்றல் கொண்டது,” என்று பிகேபிஎஸ் நோன்பு பெருநாள் திறந்த இல்ல நிகழ்வு மற்றும் சிலாங்கூர் பழத்தோட்ட பள்ளத்தாக்கின் விவசாய சுற்றுலா திட்ட தொடக்க விழாவிற்கு பிறகு   தெரிவித்தார்.

IMG_1276

 

 

 

 

 

நிகழ்ச்சியை சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார். அவரோடு மாநில நிதி அதிகாரி டத்தோ நோர்டின் சுலைமான் மற்றும் மாநில உள்கட்டமைப்பு, பொது வசதிகள், நவீன விவசாயம் மற்றும் விவசாய அடிப்படையிலான தொழில் ஆட்சிக் குழு உறுப்பினர் ஜைடி அப்துல் தாலிப் கலந்து கொண்டனர்.

#கேஜிஎஸ்


Pengarang :