NATIONAL

நிர்வாகத்தில் மறுமலர்ச்சி, நாட்டின் லஞ்ச ஊழலால் ஏற்பட்ட களங்கத்தை நீக்க முடியும்

ஷா ஆலம், ஜூலை 9:

வெளிப்படையான மற்றும் நேர்மையான நிர்வாகத்தை கொண்ட அரசாங்கமே மோசடிகள் மற்றும் நிர்வாகக் கோளாறுகளை சரி செய்ய முடியும். இந்த நடவடிக்கைக்கு மறுமலர்ச்சி சிந்தனை கொண்ட அரசாங்கம் ஒன்று புதிதாக உருவாக்கப்பட வேண்டும் என்று கெஅடிலான் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சைபூஃடின் நஸூதியோன் வலியுறுத்தினார்.

”   உண்மை நிலையில், அம்னோ தேசிய முன்னணி அரசாங்கம், அரசு சார்புடைய நிறுவனங்கள் மற்றும் பொதுச் சேவை துறையின் உயர் பதவியில் உள்ளவர்கள் நாட்டிற்கு பேரிழப்பு ஏற்படுத்தி உள்ளது அனைவரும் அறிந்ததே. மறுமலர்ச்சி சிந்தனை கொண்ட மாற்று அரசாங்கம் ஒன்றே இந்த சிக்கல்களை எதிர் கொள்ள முடியும். 60 ஆண்டுகால தேசிய முன்னணி அரசாங்கத்தின் நிர்வாகம், பல்வேறு நெருக்கடி நிலை நாட்டில் ஏற்பட காரணகர்தாவாக இருக்கிறது. நாட்டின் நற்பெயர் அடிமட்டத்திற்கு செல்லும் அளவுக்கு சென்றுள்ளது.

பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணிக்கு மக்கள் வாய்ப்பு கொடுத்தால், ஊழலில் மற்றும் மோசடிகளில் சம்பந்தப்பட்ட யாராயினும் நீதியின் முன் நிறுத்தப்படுவர் என்று தெரிவித்தார்.

இதனிடையே, நாட்டின் நற்பெயர் தொடர்ந்து பாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. நாட்டின் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் ரசாக்கை சம்பந்தப்படுத்தி பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது. அனைத்துலக செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் பிரதமர் அரசு சார்புடைய நிறுவனத்தின் நிதியை தனிப்பட்ட முறையில் பயன்படுத்திய குற்றச்சாட்டு அடிப்படையில் விசாரணை நடந்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

#கேஜிஎஸ்


Pengarang :