SELANGOR

மந்திரி பெசார்: தீயணைப்பு படையினர் புரிந்து கொண்டனர்

ஷா ஆலம், ஜூலை 5:

செதியா ஆலாம் தீயணைப்பு நிலையம் கட்டும் இடத்திற்கான நிலவரியை அரசியல் ஆக்காதீர்கள் என்று சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி கூறினார். மாநிலத்தில் விதிக்கப்படும் எந்த நிலவரியும் மத்திய அரசாங்கம் வெளியிட்ட சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது என்று மேலும் விவரித்தார்.

”   நேற்று மாநில தீயணைப்பு படையின் இயக்குனர் மற்றும் தீயணைப்பு படையினரின் உயரிய பொறுப்பில் உள்ள அதிகாரிகளை சந்தித்து நிலைமையை விளக்கி விட்டேன். தீயணைப்பு படையினர் மாநில அரசாங்கத்தின் நிலைப்பாடு புரிந்து கொண்டு உள்ளனர். மிகக் குறைந்த நிலவரி பள்ளிகளுக்கும் மற்றும் மருத்துவமனைக்கு மட்டுமே பொருந்தும் என்று சுற்றறிக்கையில் மிகத் தெளிவாக குறிப்பிடப் பட்டுள்ளது,” என்று செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

இதற்கு முன்பு மத்திய நகர நல்வாழ்வு, வீடமைப்பு மற்றும் ஊராட்சிதுறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ நோ ஒமார் வெளியிட்ட அறிக்கையில் நிலவரி அதிகமாக இருப்பதால் தீயணைப்பு நிலையம் கட்டுமான பணிகள் தள்ளிப்போட பட்டதாக கூறியதின் அடிப்படையில் பதிலடி கொடுத்தார். மேலும் விவரிக்கையில், அஸ்மின் அலி தீயணைப்பு படையினர் மத்திய அரசாங்கம் எதிர் நோக்கும் நிதி நெருக்கடி நிலைமை புரிந்து கொண்டனர் என்று கூறினார்.

MB

 

 

 

 

 

மாநில அரசாங்கம் தீயணைப்பு நிலையம் மற்றும் காவல் நிலையம் ஆகிய நிலங்களுக்கு நான்கில் ஒரு பங்கு மட்டுமே நிலவரி விதிக்கப்படுவது நீண்டகாலமாக நடைமுறையில் உள்ளதாக தெரிவித்தார். இந்த நடைமுறை 1997 பிதிஜிஎஸ் (3) சுற்றறிக்கையில் தேசிய நில மன்றத்தின் முடிவை பின்பற்றி அமலில் இருக்கிறது குறிப்பிடத்தக்கது.

#கேஜிஎஸ்


Pengarang :