NATIONAL

ராணுவத்தின் கருவிகள் காணாமல் போன சம்பவம், எஸ்பிஆர்எம் விசாரிக்கும்

ஷா ஆலம், ஜூலை 3:

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எஸ்பிஆர்எம்) ஒரு கொண்டேனா நிரம்பிய ராணுவ ராடார் கருவிகள் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்த போவதாக அறிவித்துள்ளது. தனது அறிக்கையில், எஸ்பிஆர்எம் தனது அதிகாரப்பூர்வ விசாரணை குழுவை பயன்படுத்தி இந்த சம்பவத்தை தீர விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று விவரிக்கப்பட்டுள்ளது.

”   விசாரணை குழு தங்களுக்கு கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் இந்த சம்பவத்தில் ஊழல் அல்லது அதிகார துஷ்பிரயோகம் நடந்துள்ளதா என்பதை தீவிரமாக ஆராய்ந்து வரும். எஸ்பிஆர்எம், சுங்கத்துறை அதிகாரிகள் சிலரிடம் இருந்து விவரங்கள் பெறும்,” என்று குறிப்பிட்டுள்ளது,

SPRM

 

 

 

 

 

இதற்கு முன்பு, தகவல் ஊடகங்கள், தஞ்சோங் பெலுபாஸ் துறைமுகத்தில் இருந்து பல மில்லியன் மதிப்பிலான  அதிநவீன ராணுவ ராடார் கருவிகள் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டது. இந்த ராடார் கருவிகள் ஆஸ்திரேலியாவில் இருந்து ஹாலந்து நாட்டிற்கு செல்லும் வழியில் சுங்கத்துறை அனைத்துலக வாணிப மற்றும் தொழிற்துறை அமைச்சின் (மிதி) ஆவணங்களுக்காக தடுத்து வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆனாலும், சுங்கத்துறையின் தலைமை இயக்குநர் டத்தோ தி சுப்பிரமணியம் அந்த ராணுவ ராடார் கருவிகள் நிரம்பிய கொண்டேனா காணாமல் போனதை மறுத்து ஹாலந்து நாட்டின் ரோட்டர்டேம் துறைமுகத்தில் இருப்பதாக தெரிவித்தார் என்று பெரித்தா ஹாரியான் செய்தி வெளியிட்டுள்ளது.

#கேஜிஎஸ்


Pengarang :