SELANGOR

அஸ்மின்: அரசு ஊழியர்கள் ஆட்சியாளர்களுக்கு விசுவாசமாய் இருக்க வேண்டும்

ஷா ஆலம், ஆகஸ்ட் 16:
டத்தோஸ்ரீ அஸ்மின் அலி, அரசு ஊழியர்கள் ஆட்சியாளர்களுக்குதான் (சுல்தான்) விசுவாசமாய் இருக்க வேண்டுமே தவிர அரசியல் தலைவர்களுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் அல்ல என சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முகமட் அஸ்மின் அலி நினைவுறுத்தினார்.
அதேவேளையில்,ஆட்சியில் இருக்கும் அரசாங்கத்திற்கு விசுவாசமாய் இருக்க வேண்டும் என்பதை தவறாக புர்ந்துக் கொண்டு அரசியல் கட்சிகளுக்கு அரசு ஊழியர்கள் விசுவாசமாய் இருத்தல் கூடாது என்றும் கூறினார்.

அரசாங்கத்தை வழிநடத்தும் அரசியல் கட்சிக்கு எந்தவொரு அரசு ஊழியரும் தங்களின் விசுவாசத்தை காட்டக்கூடாது என்றார்.
இச்சிந்தனையானது அரசு ஊழியர்களின் விவேகத்தையும் அவர்களின் தொழிலியல் முறையின் இயல்பியலையும் மெய்பிக்கும் என்றும் கூறிய அவர் அரசாங்கம் மாறலாம்,அரசியல் தலைவர்கள் மாறலாம்.ஆனால்,அரசு ஊழியர்கள் நிரந்தமானவர்கள் என்று நினைவுறுத்தினார்.எந்நிலையிலும் அரசியல் தலைவர்களுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் விசுவாசமாய் இல்லாமல் இருப்பதே அரசு ஊழியர்களின் சிறந்த மாண்பு என்று குறிப்பிட்டார்.

மாநில அரசு மற்றும் தேசிய அளவில் அரசு நிர்வாகத்தின் தொடர்ச்சியை உறுதி செய்வதில் இது மிக முக்கியமான சவாலாக உள்ளது, மேலும் இது மிகவும் தெளிவானதாகவும் ஆக்கபூர்வமானதாகவும் இருக்கிறது என்றார்.மாதாந்திர அரசு ஊழியர் சந்திப்பில் மந்திரி பெசார் இதனை நினைவுறுத்தினார்.

தகவல் : பிரிமலேசியா டுடே
#ரௌத்திரன்


Pengarang :