NATIONAL

காவல்துறை அதிகாரியை சுட்டதாக இரண்டு நபர்கள் ஏழு நாட்களுக்கு காவல்

ஜித்ரா, ஆகஸ்ட் 20:

கடந்த வெள்ளிக்கிழமை, சங்லூன் தாமான் ஸ்ரீ ஹோஸ்பாவில் காவல்துறை அதிகாரியை சுட்டு கொன்ற சம்பவத்தை முன்னிட்டு இரண்டு நபர்கள் ஏழு நாட்களுக்கு காவலில்வைத்து விசாரணை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜித்ரா நீதி மன்றத்தில் மூத்த மாஜிஸ்திரேட் முகமட் ஹாடி ஹாகீமி ஹாருன் மேற்கண்ட 30 மற்றும் 36 வயது கொண்ட நபர்களை ஆகஸ்ட் 26 வரை காவலில் வைக்குமாறு ஆணையிட்டார்.

சம்பவம் நடந்த அன்று, இரவு 10.25 துணை இன்ஸ்பெக்டர் அபு ஹாஷிம் இஸ்மாயில் வயது 54 சுடப்பட்ட இடத்தில் இறந்து விட்டதாக உறுதி படுத்தப்பட்டது. புக்கிட் அமான் குற்றவியல் விசாரணை (குண்டர் கும்பல்) பிரிவில் பணியாற்றும் அவரை ஆறு முறை சுடப்பட்ட நிலையில் நான்கு குண்டுகள் உடலை பதம் பார்த்தது.

கெடா மாநில காவல்துறை தலைவர், டத்தோ அஸ்ரி யூசோப் செய்தியாளர் கூட்டத்தில் பேசும்போது அபு ஹாஷிம் தனது சகாவின் வீட்டு முன் புறம் பேசிக்கொண்டு இருக்கையில் திடீரென ஒரு நபர் ஆறு தடவை அவரை சுட்டதாக காவல்துறை பதிவு செய்துள்ளது.

காவல்துறையின் அறிக்கையின் படி இதுவரை மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டதாகவும், மேலும் 35 வயது மதிக்கத்தக்க நபரை நேற்றிலிருந்து ஏழு நாட்களுக்கு காவலில்வைத்து விசாரணை செய்யப்படும் என்று தெரிவித்தார்.

தகவல்: பெர்னாமா

#கேஜிஎஸ்


Pengarang :