NATIONAL

காவல்துறை தீவிரவாதிகளுடன் தொடர்புள்ள அந்நிய நாட்டினரை வேட்டையாடி வருகின்றனர்

கோலா லம்பூர், ஆகஸ்ட் 7:

மலேசிய அரச காவல்துறை (காவல்துறை) 2017 சீ விளையாட்டு போட்டியை முன்னிட்டு, தீவிரவாதிகளுடன் தொடர்பு உள்ளதாக சந்தேகிக்கப்படும் அந்நிய நாட்டினரை கைது செய்ய கூட்டு நடவடிக்கைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

புக்கிட் அமான் சிறப்பு பிரிவு, தீவிரவாத எதிர்ப்பு பிரிவின் துணை தலைமை இயக்குநர், டத்தோ அயோப் கான் மைடின் பிச்சை கூறுகையில், சீ விளையாட்டு போட்டி சீராக நடக்க, கிள்ளான் பள்ளத்தாக்கு மற்றும் மற்ற சில இடங்களில் தீவிர நடவடிக்கையில் காவல்துறை இறங்கி இருப்பதாக கூறினார்.

”   நாம் அந்நியர்களை அடையாளம் கண்டு, அவர்களின் பின்னணியை ஆராய்ந்து குறிப்பாக தீவிரவாதம் தொடர்பு உள்ளதாக இருந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். தீவிரவாதிகளுடன் தொடர்பு உள்ள நாடுகள் (உள்நாட்டு சண்டை) குறிப்பாக சிரியா இதில் அடங்கும்,” என்று பெர்னாமாவிடம் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்பு, அயோப் கான் ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் ஆறு மணி நேரம் கூட்டு நடவடிக்கையில் தலைமையேற்று களத்தில் இறங்கினார். இந்த நடவடிக்கையில் 275 அந்நியர்கள் கைது செய்யப்பட்டனர்.

#கேஜிஎஸ்


Pengarang :