NATIONAL

துன் மகாதீர் அம்னோவிற்கு மீண்டும் திரும்ப மாட்டார்

ஷா ஆலம், ஆகஸ்ட் 14:

பெரிபூமி பெர்சத்து மலேசியா கட்சியின் ஆலோசகர் துன் டாக்டர் மகாதீர் முகமட் இனி என்றும் அம்னோவில் மீண்டும் இணையப் போவதில்லை என்றார். அம்னோ தற்போது மதம், இனம் மற்றும் நாட்டிற்கு போராடவில்லை மாறாக தற்போதைய தலைவர் டத்தோ ஸ்ரீ நஜிப் ரசாக் குட்டிச்சுவராக்கி விட்டார் என்று கூறினார். நஜிப், அம்னோ கட்சியை லஞ்ச ஊழல் மற்றும் நிதி நெருக்கடி நிறைந்த ஒரு கட்சியாக உருமாற்றம் செய்து உள்ளதாக குற்றம் சாட்டினார்.

”   மக்களாட்சி தத்துவத்தில் மிக சுலபமான ஒன்று. அம்னோ உடனடியாக அவசர பொதுக் கூட்டத்தை கூட்டி நஜிப் மீது நம்பிக்கை இல்லாத தீர்மானத்தை நிறைவேற்றினால் நஜிப் கவிழ்ந்து விடுவார். ஆனால் அம்னோ அங்கத்தினர்களுக்கு தைரியம் இல்லை. இது தான் நாம் எதிர் நோக்கும் சிக்கல். ஆகவே, நான் இனி எப்போதும் அம்னோவில் மீண்டும் இணையப் போவதில்லை,” என்று ராஜா மூடா மூசா மண்டபத்தில் நடைபெற்ற ‘எதையும் மறைக்கத் தேவையில்லை 2.0’ நிகழ்ச்சியில் பேசுகையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

துன் மகாதீர் மேலும் கூறுகையில், நஜிப் அம்னோவை மிக மோசமான கட்சியாக மாற்றி விட்டதாகவும் மலாய்காரர்கள் இனிமேல் கட்சியை மதிக்க தயாராக இல்லை என்று விவரித்தார்.

”   அம்னோவை தோற்றுவித்தவர் டத்தோ ஓன் ஜப்பார். அதன் பிறகு துங்கு அப்துல் ரஹ்மான், துன் அப்துல் ரசாக் மற்றும் துன் ஹூசேன் ஓன் போன்றவர்களின் வரலாறுகளை நஜிப் சீரழித்து விட்டார். அம்னோ தனது நோக்கமாக மதம், இனம் மற்றும் நாட்டிற்கு தற்போது போராடவில்லை. தற்காலத்தில் அம்னோ எவ்வளவு அதிகமாக பணம் திருடுவது என்ற நோக்கத்தில் மும்முரமாக செயலாற்றி வருகிறது,” என்று தெரிவித்தார்.

#கேஜிஎஸ்


Pengarang :