NATIONAL

நாட்டின் கல்விமுறையை மேம்படுத்த பாலமாக இருக்க வேண்டும்

சிகாமாட், ஆகஸ்ட் 7:

சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகள் நெருங்கும் வேளையில் நம் நாட்டின் கல்விமுறை இன்னும் கேள்விக் குறியாகவே உள்ளது. சிறந்த ஒரு கல்விமுறையை அமலாக்க எல்லா தரப்பினருடனும் பேச்சு வார்த்தைகள் நடத்தி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இது இனங்களிடையே தவறான புரிந்துணர்வு மற்றும் அரசியல் தலையீடுகளினால் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடாது என்று கெஅடிலான் கட்சியின் தேசிய ஒருமைப்பாடு பிரிவின் தலைவர் டத்தோ ஸ்ரீ எட்மண்ட் சந்தாரா கூறினார்.

நாட்டில் தேசிய மொழியைத் தவிர சீன மற்றும் தமிழ்ப்பள்ளிகள் தோற்றம் தேசிய ஒருமைப்பாட்டை சீர்குலைக்கும் என்ற எண்ணம் இன்னும் பெரும்பாலான மக்களுக்கு இருந்து வருகிறது.

”  சுதந்திரம் அடைந்ததில் இருந்து, இந்த கேள்விக்கு பதில் கிடைத்தது இல்லை, ஏனெனில் அம்னோ தேசிய முன்னணி எந்த நேரத்திலும் தேசிய மாதிரி பள்ளிகளை ஆதரிப்பவர்களையும் மற்றும் அதற்கு மாற்று கருத்து கொண்டவர்கள்களையும் சந்தித்து கருத்து பரிமாறிக் கொள்ளும் ஒரு வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கவில்லை. மத்திய அரசாங்கம், தேசிய மாதிரி பள்ளிகளின் தரப்பு வாதத்தை சற்று சீர்தூக்கி பார்க்க வேண்டும்,” என்று சீனார் ஹாரியான் நாளிதழில் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த ஜூலை 17-இல், இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் கைரி ஜமாலுதீன் தேசிய மாதிரி தமிழ் மற்றும் சீனப் பள்ளிகளின் தோற்றத்தை தொட்டு செய்தி வெளியிட்டுள்ளதை கருத்தில் கொண்டு டத்தோ ஸ்ரீ எட்மண்ட் பதில் அறிக்கை கொடுத்தார்.

#கேஜிஎஸ்


Pengarang :