RENCANA PILIHANSELANGOR

நிலங்களை பராமரிக்காமல் போனால், தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்

ஷா ஆலம், ஆகஸ்ட் 11:

ராஜா மூசா பாதுகாக்கப்பட்ட காடுகள் அருகாமையில் இருக்கும் தனியார் நிலங்களை முறையாக பராமரிக்க வேண்டும். அப்படி நில உரிமையாளர்கள் செய்யத் தவறினால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சிலாங்கூர் மாநில சுற்றுலா, பயனீட்டாளர்கள் நலன் மற்றும் சுற்றுச் சூழல் ஆட்சிக் குழு உறுப்பினர் எலிசபெத் வோங் கூறுகையில், திறந்தவெளி எரிப்பது தடைஉத்தரவு இன்னும் அமலில் உள்ளது என்றும் இதை மீறுவோர் ரிம 500,000 மற்றும் ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனையும் கிடைக்கும் என்று கூறினார்.

”  மாநிலத்தில் உள்ள எல்லா நில உரிமையாளர்களும்  திறந்தவெளி எரிப்பது தவறான செயல் என்று புரிந்து கொள்ள வேண்டும். இதன் மீதான தடை இன்னும் அமலாக்கத்தில் உள்ளது. இந்த தடை உத்தரவை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். நீதிமன்ற நடவடிக்கையை எதிர் நோக்க நேரிடும்,” என்று சிலாங்கூர் இன்றுக்கு கூறினார்.

 

elizabeth-wong-2

 

 

 

 

 

 

இதனிடையே, எலிசபெத் மேலும் கூறுகையில், ஆரம்ப நடவடிக்கை மற்றும் மாநில பேரிடர் பிரிவின் திறன் மிக்க ஒருங்கிணைந்த செயல்பாடுகள் மூலம் குறுகிய காலத்தில் தீயை கட்டுப்படுத்தியது பாராட்டக்கூடியது என்று எலிசபெத் தெரிவித்தார்.

#கேஜிஎஸ்


Pengarang :