SELANGOR

புதிய தொழில் முனைவர்களுக்கு ‘ஸீரோ டூ ஹீரோ’ திட்டம்

ஷா ஆலம், ஆகஸ்ட் 26:

வருமானம் குறைந்தவர்களை உதவும் நோக்கில், மாநில அரசாங்கம் ‘ஸீரோ டூ ஹீரோ’ திட்டத்தை தீட்டி உள்ளது. இந்த திட்டம் சிலாங்கூர் மாநில மக்கள் வியாபாரத்தில் கால் பதிக்க தூண்டுகோலாக அமையும் என்று சிலாங்கூர் மாநில சுகாதாரம், சமூக நலம், மகளிர் மற்றும் குடும்ப நலன் ஆட்சிக் குழு உறுப்பினர் டாக்டர் டரோயா அல்வி கூறினார். வருமானம் குறைந்தவர்கள் ஆனால் வியாபாரத்தில் நாட்டம் கொண்டவர்களை அடையாளம் கண்டு சிலாங்கூர் ஹிஜ்ரா திட்டத்தில் இணைத்துக் கொள்ளப் படுவார்கள் என்று தெரிவித்தார்.

”  மாநில அரசாங்கம் ரிம 1500 கீழ் வருமானம் பெறும் மக்களை ஒரு போதும் புறக்கணிக்காது. இந்த திட்டத்தின் மூலம் வறுமையின் பிடியில் சிக்கி தவிக்கும் சிலாங்கூர் மக்கள் வியாபாரத்தில் கால் பதித்து வாழ்க்கையில் வெற்றி பெற மாநில அரசாங்கம் உதவி புரியும். ஹிஜ்ரா சிலாங்கூர், வழிகாட்டி நிறுவனங்கள் தேர்ந்தெடுத்து ஹிஜ்ரா தொழில் முனைவர்களை வழிகாட்ட பணியில் அமர்த்தப் படுவார்கள்,” என்று யுனிசெல் ஷா ஆலம் வளாகத்தில் நடைபெற்ற ஹிஜ்ரா திட்டத்தின் காசோலை வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றிய போது கூறினார்.

#கேஜிஎஸ்


Pengarang :