RENCANA PILIHANSELANGOR

மந்திரி பெசார்: தேசிய காவல்துறை தலைவர், ஜோ லோவை கைது செய்து நாட்டிற்கு கொண்டு வரவேண்டும்

ஷா ஆலம், ஆகஸ்ட் 2:

தேசிய காவல்துறை தலைவர், டான்ஸ்ரீ காலிட் அபு பாக்கார் உடனடியாக லாவ் தேக் ஜோ அல்லது ஜோ லோவை கைது செய்து நாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்று சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி நேற்று வழக்கு பதிவு செய்தார். அவரின் வழக்கை வழக்கறிஞர் லத்தீபா கோயா மூலம் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது. தமது வழக்கில் தேசிய காவல்துறை தலைவர் நேற்றைய (1 ஆகஸ்ட் 2017) தினத்தில் இருந்து 14 நாட்களுக்குள் தகுந்த நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அப்படி காலிட் பாக்கார் கடமையை செய்ய தவறினால், நீதிமன்ற நடவடிக்கையை எதிர் நோக்க நேரிடும் என்று தெரிவித்தார்.

இந்த தகவலை மந்திரி பெசார் அலுவலகத்தின் வியூகத் தொடர்பு இயக்குனர் யின் ஷாவ் லூங் உறுதிப் படித்தினார்.

ஒரு நாட்டின் தேசிய காவல்துறை தலைவர் என்ற முறையில் 1967 காவல்துறை சட்டம் மற்றும் கூட்டரசு அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் அவர் தகுந்த நடவடிக்கை எடுத்து, அனைத்துலக காவல்துறை உதவியுடன் உடனடியாக செயல்பட வேண்டும்.

”   ஜோ லோ மலேசியா நாட்டின் குடியுரிமை பெற்றவர். தற்போது வெளிநாட்டில் ஒளிந்து கொண்டிருக்கிறார். அமெரிக்கா, சிங்கப்பூர், சுவிட்சர்லாந்து மற்றும் பல நாடுகளில் விசாரணைக்காக வலை வீசி தேடிக் கொண்டிருக்கிறார்கள். 1எம்டிபி பணத்தை கையாடல் சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை எதிர் நோக்கி உள்ளார்,” என்று தனது வழக்கில் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

#கேஜிஎஸ்

 


Pengarang :