MEDIA STATEMENT

14வது பொதுத் தேர்தலுக்காக பொருட்களின் விலையேற்றத்தை தள்ளிப்போடப்பட்டது

கோலா லம்பூர், ஆகஸ்ட் 2:

பொது மக்களின் ஆத்திரம் அடைந்து காணப்படுவதை உணர்ந்து அம்னோ தேசிய முன்னணி அரசாங்கம் சில வரிகளை விதிக்கப்படுவதை தள்ளி வைத்து, மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அமல்படுத்தவார்கள்.

பரிந்துரையில் உள்ள சில:

1.  ஜிஎஸ்டி வரி விரிவாக்கம் தள்ளிப் போடப்பட்டுள்ளது. 60 உணவு பொருட்களான வரி இந்த ஆண்டு அமல்படுத்த வேண்டும், ஆனால் நிறுத்தப் பட்டுள்ளது.

2. சுற்றுலா வரி உள்ளூர் சுற்றுப் பயணிகளுக்கும் விதிக்கப்படுவதாக இருந்தது, ஆனால் தற்போது வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மட்டுமே விதிக்கப்படுகிறது.

3. மின்சார கட்டண உயர்வு தள்ளிப்போட உத்தேசித்து உள்ளது.

இந்த மூன்று பரிந்துரைகளும் தேசிய முன்னணி அரசாங்கம் கொண்டு வந்த காரணம் அரசாங்கத்தின் கஜானா காலியாக உள்ளது. தற்போதைய சூழ்நிலையில் பொது மக்கள் குறிப்பாக பொதுச் சேவை ஊழியர்கள் தேசிய முன்னணி அரசாங்கத்தின் குறைந்த கையிருப்பினால் பல்வேறு வழிகளில் பட்ஜெட் குறைப்பு செய்யப்பட்டு உள்ளது. ஆனாலும் தேசிய முன்னணி அரசாங்கம் தொடர்ந்து மக்களுக்கு அரசியல் ரீதியாக செலவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்தில், பெல்டா குடியேற்றவாசிகளுக்கு பிரதமர் ரிம 1 பில்லியன் உதவித் தோகை அறிவிப்பு, ராணுவ வீரர்களுக்கு உதவித் தொகை குறிப்பாக பென்ஷன் ஆகாத பி40 வர்க்கத்திற்கு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த ‘இனிப்பான செய்திகள்’ 1எம்டிபி AS$1.2 பில்லியனை ஐபிஐசிக்கு இரண்டு தவணைகளில் 2017 டிசம்பர் 31-க்குள் கட்டப்பட்ட வேண்டும்.

இன்றைய சூழலில், எல்லா பரிந்துரைகளும் தள்ளிப்போடப்பட்டுள்ளது. 14-வது பொதுத் தேர்தல் நெருங்கும் வேளையில் அம்னோ தேசிய முன்னணி மீண்டும் மக்களின் நம்பிக்கையை பெறுவதில் தள்ளாடி வருகிறது. தேசிய முன்னணி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றினால் நாட்டு மக்கள் மேற்கண்ட வரிகளுக்கு ஆதரவு கொடுத்ததாகவே கருத முடியும்.

ஆக, மலேசியா நாட்டு மக்கள் வாக்காளர்களாக பதிவு செய்து இருப்பது அவசியம். உங்கள் வாக்குகள் நாட்டின் எதிர் காலத்தை நிர்ணயிக்க போகிறது.

* துவான் இப்ராஹிம் துவான் மான்

பாஸ் கட்சியின் துணைத் தலைவர்

#கேஜிஎஸ்


Pengarang :