Malaysia menyasarkan kemasukan 30 juta pelancong tahun ini. Foto arkib SELANGORKINI
SELANGORTOURISM

சிலாங்கூர் சுற்றுலாத்துறை புதிய தளங்களை மேம்படுத்தும்

ஷா ஆலம், செப்டம்பர் 12:

சிலாங்கூர் மாநில சுற்றுலாத்துறை புதிய சுற்றுலா தளங்கள் மற்றும் நடவடிக்கைகளை மேம்படுத்தி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுப்பயணிகளை கவர்ந்து இழுக்கும் என்று சிலாங்கூர் மாநில சுற்றுலா, சுற்றுச் சூழல், பசுமை தொழில் நுட்பம் மற்றும் பயனீட்டாளர் நலன் ஆட்சிக் குழு உறுப்பினர் எலிசபெத் வோங் கூறினார். வெளிநாட்டு சுற்றுப்பயணிகளின் பங்களிப்பை அதிகரிக்க மாநில அரசாங்கம் விளம்பரங்கள் மூலம் செயல்படுத்தும் என்றார்.

”   செப்டம்பர் மாதத்தில், சிலாங்கூர் சுற்றுலாத்துறை மூலம் ஜப்பான் நாட்டில் சுற்றுலா திட்டத்தில் பங்கெடுத்துக் கொள்ளப் போகிறோம். இதில் சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலியும் கலந்து கொள்வார். இஃது சிலாங்கூரை சுற்றுலா தளமாக வடக்கு ஆசியா குறிப்பாக ஜப்பான் நாட்டினர் தேர்ந்தெடுக்க வழி வகுக்கும். நாம் புதிதாக சில நடவடிக்கைகள் ஏற்பாடு செய்ய வேண்டும். இதன் மூலம் சுற்றுலா பயணிகளை அதிகரிக்க முடியும்,” என்று சிலாங்கூர் இன்றுக்கு கூறினார்.

elizabeth-wong-2

 

 

 

 

 

 

#கேஜிஎஸ்


Pengarang :