Uncategorized @ta

ஐபிஆர் அரசியல் சித்தாந்தங்களை கடந்து செயல்படுகிறது

ஷா ஆலம், அக்டோபர் 10:

பெர்மாத்தாங் சட்ட மன்ற மக்கள் அரசியல் வேறுபாடுகள் கடந்து பரிவுமிக்க மக்கள் நலத்திட்டங்களில் (ஐபிஆர்) பயன் பெற தவர வேண்டாம். சிலாங்கூர் மாநிலத்தின் திட்டங்கள் அரசியல் சித்தாந்தங்களை கடந்து அமல் படுத்தி வருகிறது என்று பெர்மாத்தாங் சட்ட மன்ற ஒருங்கிணைப்பாளர் ரோஸானா ஜைனால் அபீடின் கூறினார். ஐபிஆர் திட்டங்களின் மூலம் 424 பேர்கள் சமீபத்தில் பயன் பெற்றதாக குறிப்பிட்டார்.

”   இந்த வட்டாரத்தில் உள்ள மக்கள் நன்கு பயன் பெற்றனர், குறிப்பாக ஹிஜ்ரா கடனுதவி திட்டத்தில் 65 சிறுதொழில் வணிகர்கள் மொத்தம் ரிம 684,000 நிதியாக தரப்பட்டது. மீனவர்கள் மற்றும் விவசாயிகள் உணவுக் கூடை பற்றுச் சீட்டு, பெடுலி சேஹாட் சுகாதார அட்டை போன்ற ஐபிஆர் திட்டங்களின் மூலம் பயன் அடைந்தனர். மேலும் மந்திரி பெசார் பெருநிறுவனம் ஏழைகளுக்கு உதவி நிதிகளை வழங்கி வருகிறது,” என்று ஐபிஆர் விரிவாக்கம் மற்றும் மந்திரி பெசார் களம் இறங்கும் நிகழ்ச்சிக்கு பிறகு சிலாங்கூர் இன்றுக்கு தெரிவித்தார்.

தற்போதைய சூழ்நிலையில் மக்கள் எதிர் நோக்கும் அன்றாட வாழ்க்கை செலவினங்களை இந்த உதவிகள் பெரிதும் உதவுகிறது என்றால் அது மிகையாகாது.

#கெஜிஎஸ்


Pengarang :