NATIONAL

தொலைந்துப்போன 136,272 வாக்காளர்களின் விவரங்கள் மாயமாகவே உள்ளது

கோலாலம்பூர், அக் 24:

சுமார் 136,272 சிலாங்கூர் வாக்காளர்களின் விவரங்களை அழித்து விட்டதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருப்பது அந்த வாரியத்தின் மீதிலான நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கி உள்ளது.
அழிக்கப்பட்டதாக சொல்லப்படும் விவரங்கள் இன்னமும் அவ்வாரியத்திடம் இருக்கலாம் என்று சுட்டிக்காண்பித்த மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் எலிசெபெட் வோங் அவ்வாரியம் சில குறிப்பிட்ட காரணங்களுக்காக அதனை வெளியீட மறுப்பதாக கூறிய அவர் சுமார் 130,000 வாக்காளர்களின் விவரங்கள் அழிப்பு என்பது ஐயத்திற்குரியது என்றார்.

சம்மதப்பட்ட விவரங்கள் மாநில அரசிற்கு அவர்களின் வாக்களிக்கும் தகுதி மற்றும் இதர காரணங்களுக்காக தேவைப்படுவதாக கூறிய எலிசெபெட் வோங் இதற்கு முன்னர் சிலாங்கூர் மாநில அரசாங்கம் சுமாத் 136,000 அழிக்கப்பட்ட விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும் என பதிவு செய்த வழக்கினை நீதிமன்றம் நிராகரித்தையும் நினைவுக்கூர்ந்தார்.
தொகுதி எல்லை வரையறைக்கு எதிராக சிலாங்கூர் மாநில அரசாங்கம் மேற்கொண்ட வழக்கினை செவிமடுக்க வந்திருந்த எலிசெபெட் வோங் கோலாலம்பூர் நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்தார்.

#ரௌத்திரன்


Pengarang :