SELANGOR

மக்கள் சுமையைக் குறைக்கும் விவேகச் சிலாங்கூர் இலவச பேருந்து சேவை

ரவாங், அக்டோபர் 3:

செலாயாங் நகராண்மைக் கழகம் வட்டாரங்களில்,இரண்டாவது பாதைத்
திட்டத்திற்கான  விவேக சிலாங்கூர் இலவசப்  பேருந்து  சேவை (எம்பிஎஸ்2) அமலாக்கத்திற்காக   மாநில அரசாங்கம் ஆண்டுக்கு  1.25 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இத்திட்டம் ஜூலை 26  முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ரவாங்கில் உள்ள டெஸ்க்கோ  ஹைபெர்மார்கெட்டில் தொடங்கி ரவாங் ரயில் நிலையம், பேருந்து நிலையம், டெக்சி நிலையம் வரை
ஏற்படுத்தப்பட்டிருக்கும் புதிய வழித்தடம் ஒதுக்கப்பட்டிருக்கும் மாநில அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டது.இச்சேவை
மக்களின் சுமையைக் குறைக்கும் திட்டமாகும் என்றார்   முதலீடு,
தொழிற்துறை,வணிகம் மற்றும் போக்குவரத்துப்  பிரிவின் ஆட்சிக்குழு
உறுப்பினர் டத்தோ தேங் சான் கிம்.

எம்பிஎஸ் வருடத்திற்கு RM626,460
வெள்ளிச்  செலவில்  எம்பிஎஸ்1 வழித்தடத்தில்  இரண்டு பேருந்துகள்
போக்குவரத்து சேவையில் பயன்படுத்தப்படுவதாக அவர் கூறினார். விலைவாசிகள் ஏற்றங்களால் மக்களின்  வாழ்க்கைச் சுமை அதிகரித்திருப்பதால்
அதனைக் குறைக்கும் வகையில் ஏற்படுத்தப்பட்ட இந்த இலவசப் போக்குவரத்துச் சேவையை மக்கள் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அவர் மக்களைக் கேட்டுக் கொண்டார் .

மேலும் அவர் கூறுகையில்
“பொதுப்  போக்குவரத்துப்  பயன்பாட்டை ஊக்குவிப்பதில் இது முதல் படியாகும் என்றும்   மற்றும் இதனால் சாலை நெரிசலைக் குறைக்க முடியும் என்றும் அவர்
தெரிவித்தார். இன்று இங்கு நடந்த MPS சிலாங்கூர் ஸ்மார்ட் பஸ் ரூட் 2,துவக்க விழாவில் கலந்து கொண்டு நிருபர்களுடன் பேசுகையில் அவர் இவ்வாறு  கூறினார்.

எம்பிஎஸ்2 வழித்தடம், டெஸ்கோ ரவாங் இருந்து தொடங்குகிறது.PKNS வீடுகள் 16ஆவது மைல்,தாமான் கஞ்சிங் ,தாமான் துன் தேஜா, பெரிங்கின் அடுக்குமாடி,அழ-ராடியா மசூதி, ரவாங் ரயில் நிலையம்,ரவாங் மைதீன்,ரவாங் பேருந்து மற்றும் டெக்சி நிலையம் ஆகிய பகுதிகளைச் சுற்றி வருகிறது,

இச்சேவை காலை 6 மணியிலிருந்து இரவு 8 மணிவரை 4 பேருந்து சேவைகளுடன் தொடங்குகிறது. வைஃபை, மூடிய சுற்று கேமரா (சிசிடிவி) பொருத்தப்பட்ட,
பயணி  தகவல் அமைப்பு (PIS ) மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான அடிப்படைத் தேவைகள்  போன்ற வசதிகள் பேருந்து சேவையில் உள்ளன.

விவேக  சிலாங்கூர்  பஸ்  எம்.பி.எஸ் வழித்தடங்கள்,   மற்ற பொது
போக்குவரத்து அமைப்புச் சேவைகளையும் இணைக்கிறது. எம்பிஎஸ் 1 வழித்தடத்தில்  லைட் ரெயில் டிரான்சிட் (எல்ஆர்டி) டெர்மினல் புத்ரா கோம்பாக்எ,ரவாங் கம்யூட்டர் ஆகிய பகுதிகளையும், எம்பிஎஸ் 2 வழித்தடம்
ரவாங் கம்யுயூட்டர் நிலையத்தையும் இணைக்கிறது. எம்பிஎஸ் 2வழித்தடம்,
2017-இல்  சிலாங்கூர் மாநிலம் முழுவதும் அறிமுகப்படுத்தப்பட்ட 15 புதிய வழித்தடங்களில் ஒன்றாகும்.

2014-இல் , விவேக  சிலாங்கூர்  பஸ், அதிகமான இலவச பேருந்து (100)
சேவைக்கான மலேசிய கின்னஸ் சாதனைப்  புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

#சரவணன்


Pengarang :