ANTARABANGSA

மிருகங்களும் பாசத்தில் சலித்தவர்கள் அல்ல!!!

நெதர்லாந்து நாட்டு உயிரியல் பூங்காவில் சிம்பான்சி கூட்டத்திற்கே தலைவியாகத் திகழ்ந்த “மாமா” என்ற 59 வயது பெண் குரங்கின் மரணத் தறுவாயின் இறுதிக்கட்டம். முதுமையின் காரணமாக, நோய்வாடப்பட்டு எழுந்து உட்காரவும் முடியாமல், உணவும் உட்கொள்ள முடியாமல், மெல்ல மெல்ல உயிர் பிரியும் அதன் கடைசி நாட்கள்.

உயிரியல் பூங்காவில் பணிபுரியும் ஊழியர்கள் ஒவ்வொருத்தராகச் சென்று அதன் வாயில் உணவு ஊட்டி விட முயன்றபோதும் அந்த பெண் குரங்கு அதனை மறுத்து ஒதுக்குகிறது. முதுமையின் இயலாமையினால், வாழ்க்கையே வெறுத்துப்போன அந்த வாயில்லா ஜீவன், யாருடைய ஆணைக்கும் கட்டுப்பட மறுக்கிறது.

வயது முதிர்ச்சியால் ஏற்பட்ட பலமின்மை, அசதி, நோயின் தாக்கத்தின் விளைவாக சோர்வுற்று ஒரு மூலையில் ஒருக்களித்து படுத்த படுக்கையாய் கிடக்கிறது. 1972 ஆண்டு முதல் அந்தக் குரங்கை பராமரித்து வந்த ஜான் வேன் ஹூஃப் என்ற நபருக்கு உயிரியல் பூங்கா அதிகாரிகள் அழைப்பு விடுக்கிறார்கள்.

என்ன ஆச்சரியம்..!! ஜான் வந்ததும் “மாமா” அடையாளம் கண்டு கொள்கிறது, அதன் முகத்தில் ஆனந்தத்தால் பிறக்கிறது முகமலர்ச்சி. எங்கிருந்து வந்தது அந்த உற்சாகம் என்று புரியவில்லை . மரணத்தின் பிடியில் ஆட்கொண்டிருக்கும் அந்த ஜீவன், தன் வாழ்நாளில் அபரிதமான பாசத்தை தன் மேல் பொழிந்த அந்த மனிதனின் தலையை பாசத்தோடு வருடிக் கொடுக்கிறது. புன்னகை மலர, நெஞ்சம் குளிர, இறைவன் வகுத்த மரணத்தை மகிழ்ச்சியுடன் தழுவிக் கொண்டு நிரந்தர நித்திரைக்குச் செல்கிறது அந்த ஜீவன்.

#வீரத் தமிழன்


Pengarang :