SELANGOR

டெங்கில் நகரில் தீபாவளி அன்பளிப்பு நிகழ்ச்சி

டெங்கில், நவம்பர் 26:

மகான் திருமூலர் சமூக சேவை மையம் மற்றும் ஶ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம் ஏற்பாட்டில் டிங்கில் சட்டமன்ற ஒருங்கிணைப்பாளர் மற்றும் சிப்பாங் நகராண்மைக் கழக உறுப்பினர்கள் ஆதரவோடு வசதி குறைந்த 1250 பேருக்கு தலா ரி.ம 160 விகிதம் மதிப்புள்ள உணவு பொருட்கள் அன்பளிப்பு வழங்கும் விழா மற்றும் விருந்தோம்பல் கடந்து 26 நவம்பர் 2017 அன்று வெகு விமரிசையாக நடந்தேறியது.

13வது ஆண்டாக ஏற்பாடு செய்யப்படும் இந்நிகழ்வில் சுமார் 1,500 பேர் களந்துக்கொண்டனர். டிங்கில் சட்டமன்ற ஒருங்கிணைப்பாளர் ஹஜி போர்கான் அவர்கள் சிறப்புறையாற்றி இந்நிகழ்வினை துவக்கி வைத்தார். கடந்த ஒரு மாத காலமாக தன்னார்வாளார்கள், சங்க உறுப்பினர்கள் மற்றும் கொடைநெஞ்சர்கள் வாயிலாக ஶ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கத்தினரால் சேகரிக்கப்பட்ட இப்பொருட்கள் யாவும் தேர்வு செய்யப்பட்ட 1,250 வசதி குறைந்த குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.

விருந்தோம்பல் மற்றும் கலாச்சார படைப்புகளுடன் அரங்கேறிய இந்நிகழ்வில் சிலாங்கூர் மாநில அரசின் மக்கள் நல திட்டங்களில் இந்தியர்களின் பங்கேற்பினை அதிகரிக்கும் வண்ணம் அத்திட்டங்களின் சிறப்பு பதிவுகளும் டிங்கில் சட்டமன்ற மக்கள் சேவை மைய உதவியோடு ஏற்பாடு செய்யபட்டிருந்தது. இதில் அதிகமானோர் பதிவு செய்துக்கொண்டனர்.

இந்நிகழ்வு வெற்றியடைய அரும்பாடுபட்ட நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழுவினர், சங்க உறுப்பினர்கள் , நன்கொடையாளர்கள் மற்றும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றியும் வாழ்த்துக்களும். சேவை தொடரட்டும்.

செய்தி தொகுப்பு :

தீபன் சுப்ரமணியம்

செப்பாங் நகராண்மைக் கழக உறுப்பினர்


Pengarang :