SELANGOR

மந்திரி பெசார்: இனிப்பு பட்ஜெட் அல்ல !!! மக்கள் நலன் காக்கும் திட்டம்!!!

ஷா ஆலம், நவம்பர் 10:

சிலாங்கூர் மாநிலத்தின் 2018ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் இம்மாநில வாழ் மக்களின் நலனில் அக்கறைக் கொண்ட பட்ஜெட்டாகவும் மக்களுக்கான அவர்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கான பட்ஜெட் என்றும் மந்திரி பெசார் முகமட் அஸ்மின் அலி கூறினார்.
ஒவ்வொரு ஆண்டும் பாக்காத்தான் அரசாங்கம் தாக்கல் செய்யும் பட்ஜெட் மக்களின் வாழ்வாதாரம் அவர்களின் மேம்பாடு ஆகியவற்றை உள்ளடக்கிய பாரம்பரிய பட்ஜெட்டாகவே இருந்து வருவதையும் சுட்டிக்காண்பித்த அவர் மற்றவர்களை போல் சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் பட்ஜெட் தேர்தல் காலத்து இனிப்பு பட்ஜெட் அல்ல என்றும் நினைவுறுத்தினார்.

சிலாங்கூர் மாநில அரசின் பட்ஜெட் மத்திய அரசாங்கத்தின் தேர்தல் காலத்து பட்ஜெட் அல்ல.மேலும்,நமது பட்ஜெட் மக்களுக்கானது.அஃது பெரும் முதலாளிகளுக்கும் வேண்டிய கைகூலிகளுக்குமானதல்ல (குரோனி) என்றும் குறிப்பிட்டார். சிலாங்கூர் மாநிலம் மேம்பாடு அடைந்த மாநிலமாக தொடர்ந்து பீடுநடை போட்டாலும் இங்கு அதிகமான தொழில்துறைகள் இருந்தாலும் நமது மாநில பட்ஜெட்டில் மக்களை ஒருபோது புறக்கணித்ததில்லை என்றும் கூறினார்.

அதேவேளையில்,சிலாங்கூர் மாநில அரசாங்கம் நகர்புறங்களின் மேம்பாடுகளுடன் புறநகர் பகுதிகளின் மேம்பாடு மற்றும் அதன் வளர்ச்சிகளிலும் கடந்தக்காலங்களை காட்டிலும் இம்முறை கூடுதல் கவனம் செலுத்தியிருப்பதையும் டத்தோஸ்ரீ முகமட் அஸ்மின் அலி நினைவுக்கூர்ந்தார்.

இதற்கிடையில்,மாநில அரசாங்கத்தின் மக்களுக்கான பரிவு மிக்க திட்டங்களின் வாயிலாக தொடர்ந்து சிலாங்கூர் மாநில வாழ் மக்கள் பெரும் நன்மையை அனுபவித்து வருவதாகவும் கூறிய மந்திரி பெசார் இம்முறை தாக்கல் செய்யப்பட்ட 2018ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் எந்தவொரு பிரிவினரும் விடுப்படவும் ஒதுக்கவும் படவில்லை என தாம் நம்புவதாகவும் 2018ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் மக்களுக்கான பட்ஜெட் என்பதில் துளியும் ஐயமில்லை என்றும் அவர் பெருமிதமாக கூறினார்.

#வீரத் தமிழன்


Pengarang :