NATIONAL

கெஅடிலான்: பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர்!!!

கோலா லம்பூர், டிசம்பர் 29:

பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியின் பிரதமர் பதவிக்கான வேட்பாளர் பரிந்துரை சம்பந்தமாக ஊடகங்களில் கெஅடிலான் கட்சியின் செய்தி தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் உண்மையில்லை. மாறாக கெஅடிலான் கட்சியின் தலைமைத்துவம் பிரதமர் வேட்பாளர் தேர்ந்தெடுக்க மேலும் பேச்சுவார்த்தை நடத்தப் படும் என்றும் எல்லா தரப்பினரும் ஏற்றுக் கொள்ளும் வேட்பாளரை அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியது.

இதற்கு முன்பு, இடைக்கால பிரதமர் வேட்பாளர் தேர்ந்தெடுக்கப் பட வேண்டும் என்ற வேண்டுகோள்  இருந்தது. தற்போது துன் டாக்டர் மகாதீர் முகமட் அவர்களின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்பதை சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

கெஅடிலான் மற்றும் பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி கட்சிகளின் மூத்த ஆலோசகர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அனைத்து தரப்பினரும் நாட்டின் எதிர்காலத்தை அடிப்படையாக வைத்து முடிவு எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

நாட்டின் பிரதமர் மட்டும் மாறினால் போதாது மாறாக அரசாங்க நிர்வாகத்தில் மறுமலர்ச்சி ஏற்படுத்த வேண்டும். மாற்றம் முழுமையானதாக இருக்க வேண்டும் என்று நோக்கில் அனைவரும் உறுதியாக இருக்க வேண்டும்.

பாஃமி பாஃசில்
கெஅடிலான் தொடர்பு பிரிவு தலைவர்


Pengarang :