SELANGOR

ஜனவரியில் ‘கீஸ்’ அட்டை அறிமுகம்

ஷா ஆலம், டிசம்பர் 24:

அன்புத் தாய் விவேக சிலாங்கூர் (கீஸ்) அட்டை  எதிர் வரும் ஜனவரியில் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலியினால் அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைக்கப்படும் என்று சிலாங்கூர் மாநில சுகாதாரம், சமூக நலன், மகளிர் மற்றும் குடும்ப நலத்துறை ஆட்சிக் குழு உறுப்பினர் டாக்டர் டரோயா அல்வி கூறினார் இன்று தெரிவித்தார். இந்த அறிமுக விழா பொது மக்கள் குறிப்பாக மாநிலத்தின் தாய்மார்கள் விரைவில் பலன் அடைய முன்கூட்டியே ஆரம்பிக்கப் படுகிறது என்றார்.

”   தினந்தோறும் சட்ட மன்ற உறுப்பினரின் சேவை மையங்களில்  பொது மக்கள் திரளாக வந்து கீஸ் அட்டை திட்டத்திற்கு பதிவு செய்கின்றனர். கிருஸ்மஸ் பெருநாளுக்கு பிறகு கீஸ்  விண்ணப்பங்களை பரிசீலனை செய்து தகுதியானவர்களை அடையாளம் காண வேண்டும்,” என்று சிலாங்கூர் இன்றுக்கு தெரிவித்தார்.

”   தற்போதைய பொருளாதார  சூழ்நிலையில், மாநில மக்கள் மேற்கண்ட திட்டத்தில் மூலம் பயன் அடைய காத்துக் கொண்டிருக்கிறார்கள்,” என்று விவரித்தார்.

கடந்த நவம்பர் 3-இல் சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் 2018 வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்த டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி கீஸ் அட்டை விண்ணப்பத்தின் மூலம் மாநில மக்களில் 30,000 தாய்மார்கள் மாதம் ரிம 200 வீதம், வருடத்திற்கு ரிம 2,400 பெறுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

குடும்ப வருமானம் ரிம 2,000 பெறும் குடும்பங்களுக்கு மாதந்தோறும் அத்தியாவசிய பொருட்களான அரிசி, சமையல் எண்ணெய், கோதுமை மாவு, பள்ளிக்கு தேவையான உபகரணங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பேரங்காடி மற்றும் கடைகளில் கீஸ் அட்டை மூலம் வாங்கிக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொழிப் பெயர்ப்பு

கு.குணசேகரன் குப்பன்


Pengarang :